Monday, June 12, 2017

மலேஷிய விமானத்தில் கோளாறு : 15 மணி நேரம் தாமதம்

பதிவு செய்த நாள்12ஜூன்2017 00:22

சென்னை: சென்னையில் இருந்து, மலேஷியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூர் செல்லும், 'மலேஷியன் ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று முன்தினம் இரவு, 12:00 மணிக்கு, 173 பயணியர் மற்றும் ஐந்து விமான சிப்பந்திகள் என, 178 பேருடன் புறப்பட தயாராக இருந்தது. பைலட் இறுதிக்கட்ட சோதனை செய்த போது, விமானத்தில், இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தார்.
சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். விமான பொறியாளர்கள் வந்து, இயந்திர கோளாறை சரி செய்ய முயன்றனர். மலேஷியாவில் இருந்து, மாற்று உபகரணங்கள் வந்தால் தான், கோளாறை சரி செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டது; சென்னையில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் பயணியர் தங்க வைக்கப்பட்டனர்.
நேற்று காலை, 11:00 மணிக்கு, மலேஷியாவில் இருந்து, சென்னை வந்த விமானத்தில், உபகரணங்கள் வந்து சேர்ந்தன. அதை பயன்படுத்தி, கோளாறு சரி செய்யப்பட்டது. பின், நேற்று மாலை, 3:20 மணிக்கு, கோளாறு சரி செய்யப்பட்டு, 15 மணி நேரம் தாமதமாக, 'மலேஷியன் ஏர்லைன்ஸ்' விமானம், கோலாலம்பூர் புறப்பட்டுச் சென்றது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024