கிராம மருத்துவமனைகளுக்கு செல்ல டாக்டர்கள் மறுப்பு : சட்டசபையில் அமைச்சர் குற்றச்சாட்டு
பதிவு செய்த நாள்15ஜூன்2017 23:53
பெங்களூரு: “கிராமப்பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு, சிறப்பு டாக்டர்கள் செல்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை,” என, மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் கே.ஆர்.ரமேஷ் குமார் குற்றஞ்சாட்டினார்.
சட்டசபையில் நேற்றைய கேள்வி நேரத்தில், காங்கிரஸ் உறுப்பினர் சிவானந்த பாட்டீல் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் ரமேஷ் குமார் கூறியதாவது:
கிராமப்பகுதியில் வசிக்கும் ஏழை நோயாளிகளை பாம்பு, தேள் கடித்தாலும் பரவாயில்லை, அங்குள்ள மருத்துவமனைகளுக்கு செல்லக்கூடாது என்பதில் சிறப்பு டாக்டர்கள் உறுதியாக உள்ளனர்.
சிறப்பு டாக்டர்களுக்கு, மாதம், 1.25 லட்சம் ரூபாய் ஊதியம் வழங்க அரசு தயாராக உள்ளது. ஒப்பந்த அடிப்படையில் நியமித்து கொள்ளவும் ஆர்வம் காட்டுகிறது. ஆனால், டாக்டர்கள், கிராமப்பகுதிகளில் பணியாற்ற முன்வருவதில்லை.
சம்பளம் போதாது என காரணமிருந்தால், சம்பளத்தை மேலும் அதிகரிப்பது பற்றி ஆய்வு செய்யலாம். ஆனால், பல்வேறு காரணங்களுக்காக சிறப்பு டாக்டர்கள், கிராமங்களுக்கு செல்ல விரும்புவதில்லை.
ஒப்பந்த அடிப்படையிலாவது ஏழை நோயாளிகளுக்கு சேவை செய்ய வாருங்கள் என்று விண்ணப்பம் கோரியுள்ளோம். கே.பி.எஸ்.சி., மூலமாகவும் விண்ணப்பம் கோரியும், யாரும் முன்வரவில்லை.
ஏறக்குறைய, 900 சிறப்பு டாக்டர்கள் பற்றாக்குறையை நீக்க, விண்ணப்பம் கோரிய போது, 100 பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். ஒப்பந்த அடிப்படையில் வரவில்லை என்றாலும், 'கால் பேசிஸ்' ஊதியம் வழங்க தயாராக இருக்கிறோம்.
மாநிலத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காலியாகவுள்ள டாக்டர், நர்ஸ், 'டி குரூப்' ஊழியர் பதவிகள் இன்னும் ஒரு மாதத்தில் நிரப்பப்படும்.
ஏற்கனவே, 80 சதவீதத்துக்கும் அதிகமான டாக்டர் பணியிடங்கள், நிரப்பப்பட்டுள்ளன. மற்ற இடங்களுக்கும் நியமனம் முடிந்துள்ளது. காவல் துறை ஆய்வு நடக்கிறது.
பசவனபாகேவாடி தாலுகா மருத்துவமனைகளில், காலியாகவுள்ள இடங்கள், விரைவில் நிரப்பப்படும். மகளிர் சுகாதார உதவியாளர்கள் பணியிடமும் நிரப்பப்படும். ஆன்லைன் மூலம், விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment