Saturday, June 17, 2017

மதுரை, தஞ்சை, சென்னையில் பலத்த மழை

பதிவு செய்த நாள்ஜூன் 16,2017 19:15


சென்னையில் பல இடங்களில் திடீர் மழை

மதுரை: தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம், கள்ளிக்குடி, பேரையூர், செங்கம்படை,கப்பலுார் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

தஞ்சையில் பலத்த மழை

பள்ளி அக்ரஹாரம்,அய்யம்பேட்டை, கீழவஸ்தா,சாவடி, உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதன் காரணமாக பெரிய கோயில் அருகே உயர் மின் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.





சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.

சென்னையில், நுங்கம்பாங்கம் , எழும்பூர், கேயம்பேடு, தாம்பரம், ரயப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, ஆலந்துார், கே.கே.நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது.

No comments:

Post a Comment

212 PG medical seats vacant after Round 2

212 PG medical seats vacant after Round 2 TIMES NEWS NETWORK 29.12.2024 Ahmedabad : Following the second-round allocations for postgraduate ...