75 நகரங்களில் ஜிப்மர் நுழைவுத் தேர்வு - 1.89 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்
கார்த்திக்.சி
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக் கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு இன்று தொடங்கியது. இந்தியா முழுவதும் 75 நகரங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெறுகின்றன.
இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட்தேர்வு கட்டாயாமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து இந்திய மருத்துவ கவுன்சில் விலக்கு அளித்துள்ளது. இன்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. நாடு முழுவதும் 75 நகரங்களில் 339 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் 19 மையங்களிலும் புதுச்சேரியில் 6 மையங்களிலும் தேர்வு நடைபெறுகிறது. மொத்தமுள்ள 200 இடங்களுக்கு 1.89 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

No comments:
Post a Comment