வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் எண் கட்டாயம்: மத்திய அரசு
வங்கிகளில் கணக்கு தொடங்க ஆதார் எண் கட்டாயமக்கப்பட்டுள்ளது. மேலும், ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத வங்கிக் கணக்குகள் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய வருவாய்த் துறை இதுதொடர்பான அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோதே ஆதார் எண்ணுடன் - பான் எண்ணை இணைப்பது அவசியமாவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. ஒரே நபர் பல பான் அட்டைகளைப் பெற்று வரி ஏய்ப்பு செய்வதைத் தடுப்பதற்காக ஆதார் - பான் இணைப்பை கட்டாயமாக்குவதாக அரசு கூறியிருந்தது.
இந்நிலையில் தற்போது வங்கிக் கணக்கை தொடங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்கி அறிவித்துள்ளது.
அதேபோல், ரூ.50,000-க்கும் மேலான அனைத்து பணப் பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் எண்ணைத் தெரிவிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பாணை அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இதன்படி ஆதார் எண்ணைத் தெரிவிக்காத வாடிக்கையாளர்களின் கணக்குகள் டிசம்பர் 31 2017-டன் முடக்க அறிவுறுத்துயுள்ளதாகவும் மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணை அனைத்து சேவைகளுக்கும் பயன்படுத்துவதை கட்டாயமாக்குவதை எதிர்த்து வாதவிவாதங்கள் எழுந்துவரும் நிலையில் மத்திய அரசு ஆதார் தொடர்பான இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
No comments:
Post a Comment