Thursday, June 15, 2017

ஜி.எஸ்.டி., பதிவு செய்ய இன்று கடைசி நாள்

பதிவு செய்த நாள்15ஜூன்2017 05:50



சென்னை: ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறைக்கு மாறுவதற்காக, பதிவு செய்வதற்கு, இன்று கடைசி நாளாகும்.

ஜூலை 1 முதல், நாடு முழுவதும், ஜி.எஸ்.டி., வரி அமலாகிறது. தற்போது, மாநில அரசின், 'வாட்' வரி மற்றும் மத்திய அரசின் கலால், சேவை வரிகளை, 'ஆன்லைனில்' வணிகர்கள் செலுத்துகின்றனர். இனி, அவர்கள், ஜி.எஸ்.டி., வரி மட்டும் செலுத்தினால் போதும். அந்த வரி விதிப்பு முறைக்கு மாற, தனி இணையதளத்தை, மத்திய அரசு துவங்கியுள்ளது.

அதில், பதிவு செய்ய, 84 லட்சம் வணிகர்களுக்கு, ஏப்., 30 வரை, அவகாசம் தரப்பட்டது. ஆனால், 66 லட்சம் பேர் மட்டுமே, குறிப்பிட்ட கெடுவுக்குள் பதிவு செய்தனர். அதனால், பதிவு செய்யாதவர்களின் வசதிக்காக, ஜூன், 15 வரை, காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. அதன்படி, இன்று கடைசி நாளாகும்.

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...