Wednesday, June 21, 2017

ரூ.8,000-க்கு ஏலம் போன கோழி முட்டை!

By DIN  |   Published on : 21st June 2017 01:05 AM 
henegg
பிரிட்டனில் வழக்கத்துக்கு மாறாக பந்து வடிவில் இருந்த கோழி முட்டை ஒன்று ரூ.8,000-க்கு ஏலம் போய் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
மெர்ஸிசைட் மாகாணம் ஆக்ஸ்ட்ன் கிராமத்தைச் சேர்ந்தவர் லெஸ்லி ரெய்த். கோழி வளர்ப்பு பிரியர். இவர் வளர்த்த கோழிகளில் ஒன்று இட்ட முட்டை பந்து போல கோள வடிவில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அதன்பிறகு, அந்த முட்டையை அவர் ஆம்லேட் போட முயன்றுள்ளார். ஆனால், ரெய்த்தின் இந்த முயற்சியை தடுத்து நிறுத்திய அவரின் நண்பர் வித்தியாசமான அந்த முட்டையை ஆன்லைனில் ஏலம் விட வற்புறுத்தியுள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட ரெய்த் அந்த கோள வடிவ முட்டையை ஆன்லைனில் பதிவு செய்து ஏலம் விட்டுள்ளார்.
பந்து போல இருந்த அந்த முட்டையை ஆர்வத்துடன் பார்த்த பலர் அதனை வாங்க போட்டி போட்டுள்ளனர். இறுதியில் அந்த கோழி முட்டை ரூ.8,330 ரூபாய்க்கு ஏலம் போய் ரெய்த்துக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. உடனே அந்த தொகையை நாய்கள் நல அமைப்புக்கு வழங்கவுள்ளதாக அவர் அறிவித்தார்.
வித்தியாசமான இந்த முட்டை குறித்து பிரிட்டனைச் சேர்ந்த முட்டை தகவல் சேவை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், கோழிகள் இதுபோன்ற கோள வடிவ முட்டை இடுவது வழக்கத்துக்கு மாறானதே தவிர அரிதானது கிடையாது. முதல் முதலாக கோழி முட்டை இட தொடங்கும் போது இதுபோன்ற கோள வடிவ முட்டைகள் கிடைப்பது பெரும்பாலும் பொதுவானதாகவே உள்ளது என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024