Thursday, June 15, 2017

இன்ஜி., படிப்பில் மத்திய அரசு கல்லூரி 'டாப்' : தமிழக போக்குவரத்து கல்லூரியும் சாதனை

பதிவு செய்த நாள்ஜூன் 15,2017 00:12

அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், மத்திய, மாநில அரசின் இன்ஜி., கல்லுாரிகள் அதிக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. ஆண்டுதோறும், இன்ஜி., படிப்பில் சேரும் மாணவர்களின் வசதிக்காக, கல்லுாரிகளின் தேர்ச்சி தரவரிசை பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிடும்.இந்த ஆண்டுக்கான பட்டியல், அண்ணா பல்கலையின், http://aucoe.annauniv.edu என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுஉள்ளது.இந்த பட்டியலில், மத்திய, மாநில அரசின் கல்லுாரிகள் அதிக தேர்ச்சி பெற்றுள்ளன.சேலத்திலுள்ள இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனமான, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹேண்ட்லுாம் டெக்னாலஜி கல்லுாரியில், டிச., தேர்வில், 95 பேர் பங்கேற்று, 90 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல், ஏப்., மே தேர்வில், 49 பேர் பங்கேற்று, 39 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.தமிழக அரசின் போக்கு வரத்து துறை, ஈரோட்டில் நடத்தும், இன்ஸ்டிடியூட் ஆப் ரோடு அண்டு டிரான்ஸ்போர்ட் டெக்னாலஜி கல்லுாரியில், 2016, டிசம்பரில், 1,739 பேர் தேர்வு எழுதி, 74.70 சதவீதமாக, 1,299 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2016, ஏப்., மே தேர்வில், 1,777 பேர் பங்கேற்று, 79.63 சதவீதமாக, 1,415 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது தவிர, அண்ணா பல்கலையின், 13 நேரடி உறுப்பு கல்லுாரிகளில், ஏழு கல்லுாரிகள், தனியார் கல்லுாரிகளை மிஞ்சி, 60 சதவீத தேர்ச்சி பெற்று உள்ளன.திருநெல்வேலியிலுள்ள அண்ணா பல்கலை கல்லுாரி, மிக மோசமான தேர்ச்சியை பெற்றுள்ளது.காஞ்சிபுரம், 76.25; திருச்சி, 71.42; திருவண்ணாமலை, 67.90; துாத்துக்குடி, 66.35; திண்டுக்கல், 65.34; கன்னியாகுமரி, 63.52; விழுப்புரம், 63.26; கடலுார், 58.99; அரிய லுார், 54.88; நாகை, 47.65; தஞ்சாவூர், 46.60; ராமநாதபுரம், 45.64; திருநெல்வேலி, 39.73 சதவீத தேர்ச்சி பெற்று உள்ளன.

பூஜ்யமான கல்லுாரிகள் : திருநெல்வேலியில் உள்ள, ஜோ சுரேஷ் இன்ஜி., கல்லுாரி; காஞ்சிபுரம்- லார்டு அய்யப்பா இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜி., மற்றும் டெக்னாலஜி-; கோவை, நைட்டிங்கேல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய மூன்று கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்ந்த முதல் ஆண்டு, டிச., செமஸ்டரில், அனைவரும் தேர்ச்சி பெறவில்லை. அதனால், ஒட்டு மொத்தமாக, இந்த மூன்று கல்லுாரிகளிலும், தேர்ச்சி விகிதம் பூஜ்யமாக உள்ளது.பூஜ்யமானகல்லுாரிகள்




திருநெல்வேலியில் உள்ள, ஜோ சுரேஷ் இன்ஜி., கல்லுாரி; காஞ்சிபுரம்- லார்டு அய்யப்பா இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜி., மற்றும் டெக்னாலஜி-; கோவை, நைட்டிங்கேல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய மூன்று கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்ந்த முதல் ஆண்டு, டிச., செமஸ்டரில், அனைவரும் தேர்ச்சி பெறவில்லை. அதனால், ஒட்டு மொத்தமாக, இந்த மூன்று கல்லுாரிகளிலும், தேர்ச்சி விகிதம் பூஜ்யமாக உள்ளது.

- நமது நிருபர் -


No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...