Saturday, June 17, 2017

'ரூ.1 லட்சத்துக்கு குறைவான
மோசடியை புகார் செய்யாதீங்க!'


புதுடில்லி: 'ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான மோசடிகளை, போலீசில் புகார் செய்ய வேண்டாம்' என, வங்கிகளை, சி.வி.சி., கேட்டுக் கொண்டுள்ளது.



வங்கிகளில் நடக்கும், 10 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான, ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான மோசடிகள், உள்ளூர் போலீசிடம் புகார் செய்யப்பட்டு வருகின்றன.

இதில், பல நடைமுறை சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது என, வங்கிகள் தெரிவித்தன. இதையடுத்து, சி.வி.சி., என்கிற மத்திய லஞ்ச ஒழிப்பு கமிஷன், ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்தியது.

இந்நிலையில்,சி.வி.சி., உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: வங்கிகளில், 10 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக, ஒரு லட்சம் ரூபாய்க்குகீழ் நடக்கும் மோசடிகளை, இனி, உள்ளூர் போலீசிடம் புகார் செய்யத் தேவையில்லை. வங்கி உயர் அதிகாரிகளே, இதை விசாரித்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கலாம். 

எனினும், இந்த மோசடியில், வங்கி ஊழியர் சம்பந்தப்பட்டிருந்தால், போலீசில் கண்டிப் பாக புகார் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

வாராக்கடன்

இதற்கிடையில், வங்கிகளின் வாராக்கடன் பற்றி வெளியிடப்பட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்ப தாவது: நாட்டில், கடந்த ஆண்டு, செப்., 30ம் தேதி வரை, வங்கிகளின் வாராக்கடன் தொகை, 6.65 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் வாராகடன், 97 ஆயிரத்து, 356 கோடி ரூபாயாகவும், பஞ்சாப் நேஷனல் வங்கி

வாராக்கடன், 54 ஆயிரத்து, 640 கோடி ரூபாயாகவும், பாங்க் ஆப் இந்தியா வங்கியின் வாராக்கடன், 44 ஆயிரத்து, 40 கோடி ரூபாயாகவும் உள்ளது.

பரோடா வங்கிக்கு,ரூ.35 ஆயிரத்து, 467 கோடி , கனரா வங்கிக்கு,ரூ. 31 ஆயிரத்து, 466 கோடி , இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு, 31 ஆயிரத்து, 73 கோடி ரூபாய், வாராக்கடனாக உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Playing cricket witha cork ball not a criminal offence: HC

Playing cricket with a cork ball not a criminal offence: HC A scheme for compensating such eventualities could be framed, says judge. Mohame...