நீட்' தேர்வில் விலக்கு பெறுவதே அரசின் இலக்கு!
சுகாதாரத்துறை அமைச்சர் திட்டவட்டம்
சென்னை: ''நீட் தேர்வில் இருந்து, தமிழகத் திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதே, தமிழக அரசின் கொள்கை.அதற்காக, அனைத்து வழிகளிலும் முயற்சித்து வருகிறோம்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
தி.மு.க., - தங்கம் தென்னரசு: தமிழகம் முழுவதும் 'நீட்' தேர்வு, அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்; மாநில அரசின் உரிமை பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது.'நீட்' தேர்வு, சமூக நீதிக்கு எதிரானது.
கிராமப்புற மாணவர்களால், நகர்ப்புற மாணவர்களுடன் போட்டியிட முடியாது. பள்ளிக் கல்வித்துறை, 27 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து, பிளஸ் 2 வரை, மாணவர்களை உருவாக்குகிறது.
அந்த மாணவர்களுக்கு, தகுதி இல்லை எனக் கூறி, மத்திய அரசு தேர்வு நடத்துகிறது. அதே மாணவன், பி.எஸ்சி., வேதியியல் படித்து, பி.எச்டி., முடித்து, மருந்து தொழிற்சாலை ஆரம் பித்தால், அவன் கூறும் மருந்தை, மருத்துவர் கள் எழுதி தருகின்றனர்.
தமிழகத்திற்கு, 'நீட்' தேர்வில் இருந்து, விலக்கு அளிக்க கோரி சட்டம் இயற்றி, ஜனாதிபதி ஒப்பு தலுக்கு அனுப்பினோம்; அதன் நிலை என்ன? 'நீட்' தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த உள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கூறுகிறார். தமிழக அரசின் நிலை என்ன?
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: தமிழகத்திற்கு, 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதில், அரசு உறுதியாக உள்ளது. அதற்காகவே, குறித்த காலத்தில், இரண்டு மசோதாக்களை நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பினோம்.அது, மத்திய உள்துறை சட்டப் பிரிவில் உள்ளது.
அவர்கள் தான், ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும். அதற்கு முன், மத்திய சுகாதாரத்துறை மற்றும்மத்திய மனிதவள மேம்பாட்டு துறையிடம், கருத்து கேட்டனர்.
அந்த துறை சார்பில், சாதகமான பதில் அளிக்கும்படி, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை சந்தித்து பேசினோம். இரண்டு முறை விளக்கம் கேட்டனர்; அவர்கள் கேட்ட விளக்கங்களை, உடனடியாக அனுப்பி வைத்தோம்.பிரதமரை, இரு முறை முதல்வர் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார்.
மத்திய சுகாதாரத்துறையும், மனிதவள மேம்பாட்டு துறையும், சாதகமான பதிலை அளிக்கவில்லை. நீதிமன்றத்தில், தமிழக அரசின் நிலை குறித்து கேட்ட போது, 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளதை தெளிவுப்படுத்தி உள்ளோம்.
மத்திய, மாநில அரசுகளின் கல்வித்தரம் சிறப்பாக இருந்தாலும், பாடத்திட்டங்கள், கற்பித்தல் முறை போன்றவற்றில், வேறுபாடு உள்ளது என்பதை தெரிவித்துள்ளோம். மத்திய உள்துறையின் சட்டப் பிரிவு, எந்த பதிலையும் தெரிவிக்காமல் உள்ளது.
அதன் முடிவை பொறுத்தே, நாம் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள இயலும்.உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் உள்ளது. அதில், தீர்ப்பு எப்படி வருகிறது என்பதையும் பார்க்க வேண்டும்.
தீர்ப்புபாதகமாக வந்தால், கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில், உள் ஒதுக்கீடு பெற இயலுமா என்றும், சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து வருகிறோம்.'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு பெற, அனைத்து விதமான முயற்சிகளையும், எடுத்து வருகிறோம்.
தி.மு.க., - துரைமுருகன்: அமைச்சர் மிகப்பெரிய விளக்கத்தை அளித்துள்ளார். சுருக்கமாககூறினால், 'ஆப்பரேஷன் வெற்றி; நோயாளி மரணம்' என்ற கதைதான்.டில்லியில் முகாமிட்டு, சட்டத்திற்கு ஒப்புதல் தருகிறீர்களா; இல்லையா என, கேட்டிருக்க வேண்டாமா?
அமைச்சர் தங்கமணி: மத்திய அரசில் அங்கம் வகித்தபோது, இதே வேகத்தில், நீங்கள் காவிரி ஆணையம் அமைக்க செய்திருக்கலாம் இல்லையா?
அமைச்சர் சி.வி.சண்முகம்: மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, 'நீட்' தேர்வு கொண்டு வரப்பட்டது. அப்போது, கூட்டணியில் இடம் பெற்றிருந்த, தி.மு.க., அதை தடுத்திருக்க வேண்டாமா?
துரைமுருகன்: நாங்கள் செய்யாததால் தானே, மக்கள் உங்களை கொண்டு வந்தனர். நீங்களும் செய்யாவிட்டால் எப்படி?
தி.மு.க., - பொன்முடி: தி.மு.க., ஆட்சியில், மத்திய அரசை வலியுறுத்தி, 'நீட்' தேர்வை நிறுத்தி வைத்தோம்.
அமைச்சர் சி.வி.சண்முகம்: நீங்கள் போராடி நிறுத்தவில்லை. உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால் நிறுத்தப்பட்டது.
பொன்முடி: தடை விதிக்க காரணமே, தி.மு.க., தான்.
அமைச்சர் விஜயபாஸ்கர்: தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியானபோது, தமிழகத்திற்கு, நீங்கள் விலக்கு பெற்றிருக்கலாம்.இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments:
Post a Comment