Sunday, June 4, 2017

Tahsildar


Last updated : 04:13 (04/06/2017)

Vikatan

அவமானம், பணிச்சுமை ! ஆர்.கே.நகரில் இறந்துபோன பெரம்பூர் தாசில்தார் !

 ந.பா.சேதுராமன்

 மீ.நிவேதன்

சென்னை ஆர்.கே.நகர் தண்டையார்பேட்டை தாசில்தார் அலுவலகத்தில், கடந்த 31-ம் தேதி   பெரம்பூர்  தாசில்தார்  இறந்து போனார்... தண்டையார் பேட்டையில் முதியோர் ஓய்வூதியம் வழங்கும்  சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தார் பொறுப்பையும்  கவனித்து வந்தவர் மதன்பிரபு.

'இரண்டு நிர்வாகத்தையும் ஒருசேர பார்த்து வந்ததால்தான்    முப்பத்தியெட்டு வயது மதன்பிரபுவின் , வாழ்க்கை   மாரடைப்பில் முடிந்திருக்கிறது' என்று   வருவாய்த்துறை அலுவலர்கள் கொதிக்கின்றனர்.  'பணிச்சுமை, உயரதிகாரிகளின் டார்ச்சர் காரணமாகவே  மதன்பிரபு உயிரிழந்தார் என்ற குற்றச்சாட்டு, மாநில அளவில் போராட்ட வடிவமாக மாறியுள்ளது. சென்னை வியாசர்பாடி, எஸ்.ஏ.காலனியை பூர்வீகமாகக் கொண்ட மதன்பிரபுவுக்கு  மனைவி, ஐந்து வயதில் ஒரு மகள், ஒரு வயதில் ஒரு மகன் என்று   மிகவும் சிறிய குடும்பம். கடந்த  31-ம்தேதி அதிகாலை இரண்டரை மணிக்கு தண்டையார் பேட்டை தாசில்தார் அலுவலகத்தில் இருந்து மதன்பிரபு வீட்டுக்கு வந்திருக்கிறார். மீண்டும் காலை 8-மணிக்கு  அதே அலுவலகத்துக்கு  அவசரமாக வரவழைக்கப் பட்டிருக்கிறார். மதன்பிரபுவிடம் நூற்றுக் கணக்கான பைல்கள் கொடுக்கப் பட்டிருக்கிறது.  பெரும்பாலும் அவைகள் முதியோர் ஓய்வூதியம் தொடர்பான பைல்கள். அவசரகதியில் அவைகளை சரிபார்த்துக்  கொடுத்து விட்டு  அங்கிருந்து பெரம்பூர் தாசில்தார் பணிக்கும் திரும்பி ஓடவேண்டிய நிலை. ஆனால் காலை 11 மணிக்குள் தண்டையார்பேட்டைஅலுவலகத்திலேயே  மதன்பிரபுவின் மூச்சு நின்றிருக்கிறது.  

மதன்பிரபுவின் இறுதி ஊர்வலத்தில், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் மற்றும், தமிழ்மாநில வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் பலர் பங்கேற்றனர்.   சங்க நிர்வாகிகளான சி.கே.குமரன், கே.குமரன், வி.சுந்தரராஜன், கே.சி.ராம்குமார் ஆகியோர், "மதன்பிரபுவின்  மரணத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது  நடவடிக்கை எடுக்கும் வரையில் நாங்கள் போராட முடிவு செய்துள்ளோம். பெரம்பூருக்கு மாற்றப்பட்ட  பின்னரும் மதன்பிரபுவிடம்  தண்டையார் பேட்டை தாலுகா அலுவலக பணியை சேர்த்து கவனிக்கும்படி கொடுத்துள்ளனர்.  அடுத்தடுத்த  நெருக்கடி, ஆளுங்கட்சி பிரமுகர்கள்  அடிக்கடி போன் லைனில் வந்து கொடுத்த டார்ச்சரே, அவர் மரணத்துக்கு காரணம். 'என்னை மிகவும் அவமானப் படுத்துகிறார்கள்'  என்றெல்லாம் எங்களிடம்  மதன்பிரபு சொல்லி வருந்தியிருக்கிறார். 

மதன்பிரபுவுக்கு ஏற்பட்ட பிரச்னையைத் தீர்க்கும்படி நாங்கள்,  சங்கம் மூலமாகவே வருவாய்த் துறைக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் பலமுறை மனு கொடுத்து விட்டோம். அவர்கள்  இதன்மீது  எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. வருவாய்த்துறையிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுமே  மதன்பிரபுவை வாட்டி எடுத்து விட்டார்கள்.    பலமுறை வருவாய்த்துறை மந்திரி ஆர்.பி.உதயகுமாருக்கு கடிதம் அனுப்பியிருந்தோம். அவரிடமிருந்து  எந்த பதிலும் வரவில்லை" என்றனர். நாமும் மந்திரியைத் தொடர்பு கொண்டு பேச முயற்சித்தோம், அதுவும் நடக்கவில்லை... இரண்டாண்டுகளுக்கு முன்னர் இதே தண்டையார்பேட்டை தாசில்தார் அலுவலகத்தில்தான்  சத்யபிரசாத் என்ற தாசில்தார் தற்கொலைக்கு முயன்றார்... இப்போது மதன்பிரபு செத்தே போயிருக்கிறார்.  மொத்தத்தில் இங்கே உயிரோடு வாழ்வதில் அத்தனை சிரமம் போலிருக்கிறது...
 

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024