சொற்ப பயணியருடன் இயங்கும் அரசு பஸ்கள்
பதிவு செய்த நாள்01ஜூலை
2017
22:36
சென்னை, கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் பஸ்கள், பெரும்பாலும் பயணியர் இல்லாமலேயே செல்கின்றன.
விழுப்புரம், சேலம் கோட்டங்களுக்கு சொந்தமான பஸ்கள், சென்னை, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து, 20 நிமிடங்களுக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது.
வெள்ளி, சனி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில், மூன்று அல்லது நான்கு பயணியர் தான், ஒவ்வொரு பஸ்சிலும் ஏறுகின்றனர்.
இது குறித்து, நடத்துனர்கள் கூறியதாவது:
சென்னையில் இருந்து வெளியூர் செல்வோரின் எண்ணிக்கை, வார இறுதி நாட்களில் தான் அதிகமாக உள்ளது. மற்ற நாட்களில், சொற்ப அளவிலேயே உள்ளது.
முன்பு, அரை மணி நேரத்துக்கு ஒரு பஸ், கோயம்பேட்டில் இருந்து வெளியூர் புறப்படும். தற்போது, 10 முதல், 20 நிமிடங்களில் அடுத்தடுத்து பஸ்சை இயக்குமாறு, அதிகாரிகள் உத்தரவிடுகின்றனர். அதனால், சொற்ப பயணியரே ஏறுகின்றனர்.
இதனால், போக்குவரத்து கழகத்திற்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. ஆனால், வசூல் ஆகாததற்கு, ஓட்டுனர், நடத்துனர்களே காரணம் என்பது போல, புகார் கூறி, 'மெமோ' கொடுக்கின்றனர்.
வார நாட்களில், பகலில் பஸ்களின் எண்ணிக்கையை குறைத்து, இரவில் அதிகப்படுத்தினால், வசூலை ஓரளவு பெருக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment