Sunday, July 2, 2017

தளம் புதிது: பி.டி.எஃப். கருவிகளை அளிக்கும் இணையதளம்

சைபர் சிம்மன்

பி.டி.எஃப். கோப்பு வடிவத்தை நீங்கள் பலவிதங்களில் எதிர்கொள்ளலாம். இணையத்தில் உலாவும்போது, பல தகவல்கள் பி.டி.எஃப். கோப்பு வடிவில் இருப்பதைப் பார்க்கலாம். பணி நிமித்தமாக நீங்களேகூட, பி.டி.எஃப். கோப்புகளை உருவாக்கும் பழக்கம் கொண்டிருக்கலாம். பி.டி.எஃப். கோப்பு பயன்பாடு தொடர்பான உங்களுக்குத் தேவைப்படக்கூடிய பலவிதமான இணையக் கருவிகளை ஒரே இடத்தில் வழங்குகிறது கிளவர்பி.டி.எஃப். இணையயதளம்.
பி.டி.எஃப். கோப்பை உருவாக்குவது எளிதானது. அதற்குரிய மென்பொருள் இருந்தால் போதும். ஆனால், பல நேரம் பி.டி.எஃப். கோப்பை வேறு வடிவங்களுக்கு மாற்றும் தேவை ஏற்படலாம். உதாரணத்துக்கு பி.டி.எஃப். கோப்பைச் சாதாரண வேர்டு கோப்பாக மாற்ற வேண்டியிருக்கலாம். இத்தகைய மாற்றங்களைச் செய்வதற்கான கருவிகள் அனைத்தும் இந்தத் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு ஐகான் இருக்கிறது. அதில் கிளிக் செய்தால் விரும்பிய கோப்பு வடிவத்துக்கு மாற்றிக்கொள்ளலாம்.

இதேபோலப் பிற கோப்பு வடிவங்களிருந்தும் பி.டி.எஃப். கோப்பாக மாற்றிக்கொள்ளலாம். இதற்கான கருவிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. பவர் பாயிண்ட் அல்லது உருவப்படத்தைப் பி.டி.எஃப். கோப்பாக மாற்றிக்கொள்ளலாம்.

இவற்றைத்தவிர, பி.டி.எஃப். கோப்புகளை இணைப்பது, பி.டி.எஃப். கோப்புகளைப் பிரிப்பது, சுருக்குவது போன்ற தேவைகளுக்கான இணையக் கருவிகளும் இடம்பெற்றுள்ளன. இப்படி பி.டி.எஃப். தொடர்பான 19 வகையான பயன்பாட்டுக்கான இணையக் கருவிகளை இந்தத் தளத்தில் பெறலாம்.
இணைய முகவரி: https://www.cleverpdf.com/

No comments:

Post a Comment

NEWS TODAY 11.01.2025