Wednesday, August 2, 2017

பெண் டாக்டர் 'சஸ்பெண்ட்' : மதுரை கலெக்டர் அதிரடி

பதிவு செய்த நாள் 01 ஆக
2017
20:37

மதுரை: ஆரம்ப சுகாதார நிலையத்தில், பணியில் மெத்தனமாக இருந்த பெண் டாக்டரை, 'சஸ்பெண்ட்' செய்ய, கலெக்டர் உத்தரவிட்டார்.
மதுரை மாவட்டம், சக்கிமங்கலத்தில் நடக்கும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய, கலெக்டர் வீரராகவ ராவ் நேற்று சென்றார். அங்கு வந்த ஒரு பெண், 'என், இரண்டு வயது மகனுக்கு, சில நாட்களுக்கு முன், இடது கண்ணில் அடிபட்டது. ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற போது, சிகிச்சை அளிக்க மறுத்த நர்ஸ் சித்ராதேவி, தனியார் கிளினிக் செல்லுமாறு கூறினார்' என புகார் தெரிவித்தார். சுகாதார நிலையத்திற்கு சென்ற கலெக்டர், நர்ஸ் சித்ரா தேவியிடம் விசாரித்தார். 'அன்று, டாக்டர் பணி முடிந்து சென்று விட்டார். ஒரு பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. சிறுவனுக்கு கண்ணின் மேல் பகுதியில் அடிபட்டதால், அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினேன்' என, நர்ஸ் சித்ராதேவி கூறினார். அவரை எச்சரித்த கலெக்டர், முறையாக முதலுதவி செய்ய அறிவுறுத்தினார்.பின், சுகாதார நிலைய வருகை பதிவேட்டை ஆய்வு செய்து, டாக்டர் தீபாவிடம் பணி நேரம் குறித்து, கேள்வி எழுப்பினார். 'காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை' என, டாக்டர் தீபா குறிப்பிட்டார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் அர்ஜுன்குமாரிடம் போனில் கலெக்டர் விசாரித்த போது, 'டாக்டர்களின் பணி நேரம், மாலை, 4:00 மணி வரை' என குறிப்பிட்டார்.இதையடுத்து, பணியில் மெத்தனமாக இருந்ததாக, டாக்டர் தீபாவை, 'சஸ்பெண்ட்' செய்ய, கலெக்டர் பரிந்துரை செய்தார்.

No comments:

Post a Comment

Girl who left home after a fight 7 years ago found

Girl who left home after a fight 7 years ago found  Abhay@timesofindia.com 11.01.2025 New Delhi : In 2018, a 17-year-old girl fought with he...