Saturday, August 5, 2017

வருமான வரி கணக்கு; இன்று கடைசி நாள்
பதிவு செய்த நாள்05ஆக
2017
06:14




சென்னை: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு அளிக்கப்பட்ட கூடுதல் அவகாசம், இன்றுடன்(ஆக., 5) நிறைவடைகிறது.

மாத ஊதியம் பெறுவோர் உள்ளிட்ட சில பிரிவினருக்கு, 2016 - 17க்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு, ஜூலை, 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அத்துடன், வருமான வரி செலுத்துவோர், ஆதார் எண்ணுடன் - பான் கார்டு எண்ணை இணைப்பது கட்டாயம். அதற்காக, ஆயிரக்கணக்கானோர் முண்டியடித்ததால் சர்வர் முடங்கியது. அதனால், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான தேதி, இன்று(ஆக.,5) வரை நீட்டிக்கப்பட்டது.

அதேபோல, ஆதார் - பான் எண்களை இணைப்பதற்கான தேதியும், வரும், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், வருமான வரி தாக்கல் செய்வோர், ஆதார் எண்ணையோ அல்லது அதற்கு மனு செய்ததற்கான அத்தாட்சி ரசீதையோ இணைத்தால் போதும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு, ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுவோர், ஆன்லைனில் மட்டுமே கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அவர்களுக்கும், இன்றுடன் கெடு முடிகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024