Sunday, August 6, 2017

போலீசார் தடுத்தும் ஆர்ப்பாட்டத்தில் குவிந்த ஆசிரியர், அரசு ஊழியர்கள்

பதிவு செய்த நாள்05ஆக
2017
22:06




சென்னை, போலீசார் பல இடங்களில் தடுத்து நிறுத்தியும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' நடத்திய ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் குவிந்தனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர அரசாணை பிறப்பிக்க வேண்டும்; ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான எட்டாவது ஊதிய மாற்றத்தை, உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ, பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது.
கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று, சென்னை, மன்றோ சிலையிலிருந்து, கோட்டை நோக்கி பேரணி நடத்தப் போவதாக, கூட்டமைப்பு அறிவித்திருந்தது. கோட்டை நோக்கி பேரணி செல்ல, போலீசார் அனுமதி மறுத்தனர்; சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன், பல்வேறு நிபந்தைகளுடன் ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்த, அனுமதி வழங்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க, மாநிலம் முழுவதும் இருந்தும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வேன், பஸ்களில் சென்னை நோக்கி வந்தனர். வரும் வழியில், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். எனினும், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், பல ஆயிரம் பேர் குவிந்தனர். இதனால், அப்பகுதியில் போக்குரவத்து பாதிக்கப்பட்டது.
'கோரிக்கைகைளை அரசு நிறைவேற்றாவிட்டால், வேலை நிறுத்தம் செய்யும் சூழல் ஏற்படும்' என, நிர்வாகிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024