Wednesday, August 9, 2017

'டெங்கு' சிகிச்சை சித்தாவிற்கு தடை
பதிவு செய்த நாள்08ஆக
2017
21:24


'டெங்கு காய்ச்சலுக்கு, சித்த மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை அளிக்கக் கூடாது' என அரசு உத்தரவிட்டுள்ளது. கோவை உட்பட பல மாவட்டங்களில், டெங்கு காய்ச்சல் பரவியுள்ளது. ஏராளமானோர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இக்காய்ச்சலுக்கு, அரசு சித்த மருத்துவமனைகளில், நிலவேம்பு கஷாயம் வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்தி, சித்த மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதித்து, சிகிச்சை அளிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, 'அரசு சித்த மருத்துவமனைகளில் டெங்கு, சிக் குன்- குனியாவிற்கு நிலவேம்பு கஷாயம், சித்த மருந்துகள் மட்டுமே வழங்க வேண்டும். உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்க கூடாது. அவர்களை அரசு மருத்துவமனைகளுக்கு தான் அனுப்ப வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024