Saturday, August 12, 2017


சத்திரப்பட்டியில் டாஸ்மாக் கடை சூறை ; பெண்கள் ஆத்திரம்

பதிவு செய்த நாள்12ஆக
2017
05:05




சத்திரப்பட்டி; விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி கிழவன் கோயில் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை பெண்கள் சூறையாடினர்.
ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை இருநாட்களுக்கு முன் சத்திரப்பட்டி கிழவன் கோயில் பகுதிக்கு இடம் மாற்றப்பட்டது. இப்பகுதியை சுற்றி வீடுகள், பேண்டேஜ் ஆலைகள், அகதிகள் முகாம் உள்ளன. கடை முன்புள்ள பாதையை குறவர் காலனி மற்றும் அகதிகள் முகாமில் வசிப்போர் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு டாஸ்மாக் திறக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு மது குடித்த சிலர் இப்பகுதியில் நடந்து சென்ற சிறுவனை தாக்கினர்.

ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உட்பட 50 க்கு மேற்பட்டோர் நேற்று காலை டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததையடுத்து, டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்தனர். உள்ளே புகுந்த அவர்கள் அங்கிருந்த மது பாட்டில்களை பெட்டியுடன் எடுத்து வந்து கடை வாசலில் போட்டு உடைத்தனர். ' சேதமுற்ற மது பாட்டில்களின் மதிப்பு ரூ.4 லட்சத்திற்கும் மேல் இருக்கும் ,'என. கடை மேற்பார்வையாளர் தெரிவித்தார்.
இப்பகுதி சந்தனமாரிகூறுகையில்,“ஏற்கனவே வீட்டில் உள்ள ஆண்கள் யாரும் கூலி வேலை சென்று பணம் கொண்டு கொடுப்பதில்லை. இதில் டாஸ்மாக் கடை வேறு திறந்துள்ளதால் வீட்டில் நிம்மதி கெட்டு விடும். அதற்கு பயந்தே எதிர்ப்பு தெரிவித்தோம். அதிகாரிகள் யாரும் வராததால் பாட்டில்களை உடைத்தோம். பெண்களின் பிரச்னைகளை புரிந்து கடையை அகற்ற வேண்டும்,” என்றார். வன்னியம்பட்டி போலீசார் மதுபாட்டில்களை சேதப்படுத்திய பெண்கள் மீது வழக்கு பதிவு செய்வது தொடர்பாக ஆலோசித்து
வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024