Saturday, August 12, 2017


நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல் இரண்டு நாட்களில் வெளியிடப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு !!

நாடு முழுவதும் மே 7ம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடந்தது. ஆனால், மத்திய அரசு அந்த மசோதாக்களுக்கு குடியரசு தலைவரிடம் ஒப்புதல் பெற்று தரவில்ைல. நீட் மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில் அந்த

அரசாணைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘‘85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். அடுத்தகட்ட நடவடிக்கையாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தமிழக முதல்வரின் வழிகாட்டுதல்படி மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும். நீட் மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப்பட்டியல் இரண்டு நாட்களில் வெளியிடப்படும்’’ என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024