Wednesday, August 9, 2017

நீட் அவசர சட்டத்துக்கு தமிழக அரசு ஆலோசனை பெறவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசுவக்கீல் 'பகீர்

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் அவசர சட்டம் தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை கேட்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரும் அவசர சட்டம் கொண்டுவர அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் டெல்லியிலேயே முகாமிட்டிருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரையும் தமிழக அமைச்சர்கள் சந்திக்கின்றனர் என்றெல்லாம் சொல்லப்பட்டது.ஆனால் நீட் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், நீட் அவசர சட்டத்தை மத்திய அரசிடம் தமிழக அரசு கொடுத்துள்ளது.

ஆனால் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்துக்கு எந்த ஒரு ஆலோசனையையும் தமிழக அரசு கேட்கவில்லை என குண்டை தூக்கிப் போட்டார்.இதனால் நீட் அவசர சட்டம் பற்றி தமிழக மக்களுக்கு பொய்யான தகவலை தமிழக அமைச்சர்கள் தெரிவித்துள்ளது அம்பலமாகியுள்ளது.இந்த நீட் வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024