Thursday, August 3, 2017

டில்லியில் நெரிசல் பகுதியில் வாகனம் நிறுத்த ரூ.2,500 கட்டணம்

பதிவு செய்த நாள் 03 ஆக
2017
04:06



புதுடில்லி: புதுடில்லியில், போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில், 'அபராத' வாகன நிறுத்துமிடங்களை அமைக்க, டில்லி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

டில்லியில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன நெரிசல் மற்றும் சட்டவிரோத வாகன நிறுத்தங்களை கட்டுப்படுத்த, புதிய வாகன நிறுத்துமிட கொள்கையை டில்லி மாநகராட்சி நிர்வாகம் தயாரித்துள்ளது.

வடக்கு டில்லி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் உள்ள தெருக்களை தேர்ந்தெடுத்து, 'அபராத வாகன நிறுத்துமிடங்கள்' அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுபோன்ற பகுதிகளில், 200 அடி அகலமுள்ள சாலைகள், அபராத வாகன நிறுத்துமிடமாக அறிவிக்கப்படும். இந்த இடங்களில் வாகனம் நிறுத்துவோர் சாதாரண கட்டணத்தை விட, ஐந்து மடங்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

இங்கு, ஒரு மணி நேரம் முதல் நாள் முழுவதும் வாகனங்களை நிறுத்தலாம். அதற்கு தகுந்தபடி அபராதம் செலுத்துவது போல், கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.50 - 500; ஆட்டோவுக்கு ரூ.300 -- 1,500; கார்களுக்கு ரூ.100 - 2,500; பஸ், வேன்களுக்கு ரூ.400 - 2,500 ரூபாய் அபராத கட்டணம் வசூலிக்கப்படும். இதற்காக, கமலா நகரில் ஆறு சாலைகள், மாடல் டவுன் - 2ல், நான்கு சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

dinamalar

No comments:

Post a Comment

NEWS TODAY 28.11.2024