Thursday, November 9, 2017


எட்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து


சென்னை: மேற்கு வங்க மாநிலம், காரக்பூரில் ரயில் பாதை பராமரிப்பு பணி நடப்பதால், தமிழகத்தில், முக்கிய நகரங்களில் இருந்து இயக்கப்படும், எட்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 சென்னை சென்ட்ரலில் இருந்து, வரும், 16ல், மேற்கு வங்க மாநிலம், ஹால்தியாவுக்கு இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ்; திருச்சியில் இருந்து, வரும், 17ல், மேற்கு வங்க மாநிலம் ஹவுராவுக்கு இயக்கப்படும், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன
 புதுச்சேரியில் இருந்து, 18ம் தேதி, மேற்கு வங்க மாநிலம், சந்திரகாசிக்கு இயக்கப்படும், வாராந்திர எக்ஸ்பிரஸ்; சென்னை சென்ட்ரலில் இருந்து, 20ம் தேதி, சந்திரகாசிக்கு இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன
 மேற்கு வங்க மாநிலம், ஹால்தியாவில் இருந்து, 18ம் தேதி, சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ்; சந்திரகாசியில் இருந்து, 19ம் தேதி, சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும், சந்திரகாசி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன
 மேற்கு வங்க மாநிலம், ஹவுராவில் இருந்து, 19ம் தேதி, திருச்சிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ்; சந்திரகாசியில் இருந்து, 20ம் தேதி, புதுச்சேரிக்கு இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024