Monday, November 13, 2017

சென்னையில் பரவலாக மழை


சென்னையில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.

நவம்பர் 13, 2017, 01:30 AM

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது. கடந்த மாதம் 31-ந் தேதி முதல் கடந்த 4-ந் தேதி வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. அதன்பின்னர், சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருக்கும் ஏரிகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்தது.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் அடித்தது. அவ்வப்போது சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. நேற்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

நேற்று மாலை 5.30 மணியளவில் கிண்டி, சைதாப்பேட்டை, மாம்பலம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், எழும்பூர் போன்ற பகுதிகளில் லேசான மழை பெய்தது. இரவு 8 மணிக்கு மேல் எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ஓட்டேரி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சூளைமேடு, மகாகவி பாரதிநகர், கண்ணதாசன் நகர், வியாசர்பாடி, பெரம்பூர், தண்டையார்பேட்டை, ராயபுரம், எண்ணூர், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, கொளத்தூர், வில்லிவாக்கம், பாடி, ராமாபுரம், தியாகராயநகர், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, நந்தனம், முகப்பேர், பூந்தமல்லி நெடுஞ்சாலை, வளசரவாக்கம், ஈக்காட்டுதாங்கல், வடபழனி, ஆதம்பாக்கம், கிண்டி, கொடுங்கையூர் உள்பட சென்னையில் பல இடங்களில் மழை பெய்தது. சில இடங்களில் பலத்த மழை பெய்தது.

இதனால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பல இடங்களில் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இரவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பூந்தமல்லி, குன்றத்தூர், போரூர், மதுரவாயல், மாங்காடு, தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, அனகாபுத்தூர் பகுதிகளில் மழை பெய்தது.

ஆலந்தூர், பரங்கிமலை, மீனம்பாக்கம், மடிப்பாக்கம் பகுதியிலும் மழை கொட்டியது. மாதவரம், புழல், செங்குன்றம், சோழவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.

ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருமுல்லைவாயல், கீழ்கட்டளை, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், காட்டாங்கொளத்தூர், மாமல்லபுரம், நெம்மேலி போன்ற இடங்களில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மீஞ்சூர், சோழவரம், மணலிபுதுநகர், பழவேற்காடு, ஆரணி, பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை கொட்டியது.

திருவள்ளூர் ஊத்துக்கோட்டை பகுதிகளில் லேசான மழை பெய்தது.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...