Monday, November 13, 2017

விமான பணிப் பெண்ணாக இருந்து வந்த ஜனாதிபதி மகளுக்கு அலுவலக பணி ஏர் இந்தியா நடவடிக்கை

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் மகள் சுவாதி. இவர் ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் விமான பணிப் பெண்ணாக பணியாற்றி வந்தார். குறிப்பாக நெடுந்தொலைவுக்கு செல்கிற போயிங் 787, போயிங் 777 ரக விமானங்களில் அவர் பணிப் பெண்ணாக இருந்தார். 

நவம்பர் 13, 2017, 03:30 AM

புதுடெல்லி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் மகள் சுவாதி. இவர் ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் விமான பணிப் பெண்ணாக பணியாற்றி வந்தார். குறிப்பாக நெடுந்தொலைவுக்கு செல்கிற போயிங் 787, போயிங் 777 ரக விமானங்களில் அவர் பணிப் பெண்ணாக இருந்தார்.

இந்த நிலையில், அவருக்கு திடீரென அலுவலக பணி வழங்கப்பட்டுள்ளது.

அவர் டெல்லியில் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவன தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்புத்துறையில் ஒரு மாத காலமாக வேலை பார்த்து வருகிறார்.

இதுபற்றி ஏர் இந்தியா வட்டாரங்கள் கூறும்போது, ‘‘ஜனாதிபதியின் மகள் என்பதால், அவர் பாதுகாப்பு அதிகாரிகள் புடைசூழ விமானத்தில் பறக்க முடியாது என்று கருதுகிறோம். பயணிகளுக்கான பல இருக்கைகளை அப்படி ஒதுக்குவது சாத்தியம் இல்லை’’ என்று குறிப்பிட்டன.

எனவே பாதுகாப்பு காரணங்களையொட்டி, சுவாதி ஏர் இந்தியா விமான நிறுவன தலைமை அலுவலகத்தில் பணி அமர்த்தப்பட்டுள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024