Wednesday, November 8, 2017



ஜெ., மறைவு விசாரணை கன மழையால் தாமதம்

தொடரும் கனமழையால், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள நீதி விசாரணை கமிஷன், தன் பணியை துவக்குவதில், தாமதம் ஏற்பட்டுள்ளது.



முதல்வராக இருந்த ஜெ., உடல் நலக்குறைவு காரணமாக, 2016 செப்., 22ல், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, டிச., 5ல் இறந்தார்.

'ஜெ., மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால், விசாரணை நடத்த வேண்டும்' என, பல தரப்பினரும் வலியுறுத்தினர்.

அதையேற்று, ஜெ., மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்றஉயர்நீதிமன்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமை யில், விசாரணை கமிஷன் அமைக்கப் பட்டு உள்ளது. விசாரணை கமிஷனுக்கு, சென்னை எழிலகத்தில் உள்ள, கல்சா மஹாலின் முதல் தளத்தில், அறை ஒதுக்கப்பட்டுள்ளது. நீதிபதிக்கு உதவ, 13 ஊழியர்களும், ஆணைய செயலராக, பன்னீர்செல்வமும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ஜெ., மரணம் தொடர்பாக, விசாரணைகமிஷனுக்கு, தினமும் பொதுமக்கள் உட்பட, பல தரப்பட்டவர் களிடம் இருந்து, கடிதங்கள் வந்தபடி உள்ளன. அவற்றை, ஊழியர்கள் தொகுத்து வருகின்றனர். விசாரணை கமிஷன் அலுவலகத்திற்கு, 'ஷிப்டு' அடிப்படையில், துப்பாக்கி ஏந்திய போலீஸ்

பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.ஆனால், தமிழகத்தில் கன மழை பெய்து வருவதால், நீதிபதியின் விசாரணை துவங்குவதில், கால தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை பாதிப்பு நீக்கியதும், விசாரணை முழுவீச்சில் துவங்கும் என, தெரிகிறது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024