Wednesday, November 1, 2017


ரயில்வே கால அட்டவணை வெளியீடு: சென்னைக்கு புதிய மின்சார ரயில் சேவை

By DIN  |   Published on : 01st November 2017 02:16 AM   
எதிர்வரும் ஆண்டுக்கு செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ரயில்வே கால அட்டவணையில் சென்னை புறநகருக்கு புதிய மின்சார ரயில் சேவைகள் புதன்கிழமை (நவ.1) முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மின்சார ரயில் சேவைகள்
செங்கல்பட்டு - திருமால்புரம்: ரயில் எண் 40901/40902: செங்கல்பட்டில் இருந்து காலை 5.15 மணிக்குப் புறப்பட்டு திருமால்புரத்துக்கு காலை 6.45 மணிக்குச் சென்றடையும். மறுமார்க்கத்தில், திருமால்புரத்தில் இருந்து இரவு 9 மணிக்குப் புறப்பட்டு செங்கல்பட்டுக்கு இரவு 10 மணிக்கு வந்தடையும்.
சென்னை சென்ட்ரல் - ஆவடி: ரயில் எண் 66061/66052: சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 2.05 மணிக்குப் புறப்பட்டு ஆவடிக்குப் பிற்பகல் 2.45 மணிக்குச் சென்றடையும். மறு மார்க்கத்தில், ஆவடியில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்குப் புறப்பட்டு சென்னை சென்ட்ரலுக்கு பிற்பகல் 3.35 மணிக்கு வந்தடையும்.
சென்னை கடற்கரை - திருவள்ளூர்: ரயில் எண் 66053/66012: சென்னை கடற்கரையில் இருந்து மாலை 4.40 மணிக்குப் புறப்பட்டு திருவள்ளூருக்கு மாலை 6.10 மணிக்குச் சென்றடையும். மறு மார்க்கத்தில், திருவள்ளூரில் இருந்து மாலை 6.30 மணிக்குப் புறப்பட்டு சென்னை சென்ட்ரலுக்கு 7.50 மணிக்கு வந்தடையும்.
சென்னை சென்ட்ரல் - ஆவடி புறநகர் ரயில் திருவள்ளூர் வரை நீட்டிப்பு: ரயில் எண் 66001: சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 8.40 மணிக்குப் புறப்பட்டு திருவள்ளூருக்கு இரவு 10 மணிக்குச் சென்றடையும்.
சென்னை மூர்மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி , மூர்மார்க்கெட் - திருவள்ளூர், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையிலான சில மின்சார ரயில்களின் நேரமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும், வந்தடையும் விரைவு ரயில்களின் நேர மாற்றம் 

 தெற்கு ரயில்வேயின் 2017 - 2018 ஆம் ஆண்டுக்கான புதிய ரயில்வே கால அட்டவணையின்படி சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும், வந்தடையும் விரைவு ரயில்களின் நேரம் புதன்கிழமை முதல் மாற்றப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...