Sunday, December 24, 2017

தலைமை செயலக ஊழியர்கள் அவதி

Added : டிச 23, 2017 20:53

சென்னை, தலைமைச் செயலகத்தில், 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்த ஊழியர்கள் அனைவருக்கும், ஒவ்வொரு ஆண்டும், பொதுத் துறை சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும்.கடந்தாண்டு வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஜூலை மாதத்துடன் காலாவதியானது. இதுவரை புதிய அடையாள அட்டை வழங்கப்படவில்லை.
நுழைவாயிலில், பாதுகாப்பு பணியிலிருக்கும் போலீசார், 'காலாவதியான அடையாள அட்டையை காண்பிக்கிறீர்கள்' எனக் கேட்பதால், ஊழியர்கள்மன உளைச்சலுக்குஆளாகியுள்ளனர்.

சார்பு செயலர், துணை செயலர் அந்தஸ்தில் உள்ளவர்கள், தற்காலிக அடையாள அட்டை பெற்று உள்ளனர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024