Sunday, December 24, 2017

'ஊழல் வரிசையில் தமிழகம் முதலிடம் பெறலாம்!'

சென்னை:ஊழல் மாநிலமாக, முதல் வரிசையில் தமிழகம் வர வாய்ப்பு இருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.



சாலை ஒப்பந்ததாரர், நிம்ரோட் என்பவர் தாக்கல் செய்த மனு:சென்னையை அடுத்த, மறைமலைநகரில், சாலை அமைப்பதற்கான ஒப்பந்தப் பணியை பெற்றேன். 60 நாட்களில் பணியை முடித்து, போக்குவரத்துக்காக, மறைமலைநகர் பேரூ ராட்சி வசம், சாலை ஒப்படைக்கப்பட்டது. பணி முடிந்த பின், 18.46 லட்சம் ரூபாய், எனக்கு வழங்கப்பட்டது. ஒரு மாதத்தில், சாலை சேதம் அடைந்ததாக, கலெக்டருக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.
செப்பனிடும் பணியை மேற்கொள்ளவும், அதற்கான செலவை ஏற்கும்படியும், என்னிடம் கூறப்பட்டது. நான்கு லட்சம் ரூபாய் செலவில், செப்பனிடும் பணியை மேற்கொண்டேன். சாலை பழுதுக்கு, நான் காரணம் அல்ல.

இந்நிலையில், சாலை சேதமடைந்ததற்கு, நான் காரணம் என்றும், ஒப்பந்ததாரர்கள் பட்டிய லில் இருந்து, ஒதுக்கி வைத்திருப்பதாகவும், இழப்பு தொகையை வசூலிக்க போவதாக வும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.மறைமலைநகர், பேரூராட்சி நிர்வாக அதிகாரி பிறப்பித்த, இந்த உத்தரவு சரியல்ல. பல காரணங்களால், சாலை சேதமடைகிறது. எந்த விசாரணையும் இல்லாமல், நான் தான் காரணம் என, தன்னிச்சை யாக முடிவெடுக்கப் பட்டுள்ளது. எனவே, இந்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, நீதிபதி, வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:

ஒப்பந்ததாரர்கள் பட்டியலில் இருந்து, ஏன் ஒதுக்கி வைக்கக் கூடாது என கேட்டு, மனுதாரருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. அதனால், மனுதாரருக்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை என்பதை, ஏற்க முடியாது. மழை, கனரக வாகனங் களால், சாலை சேதமடைந்ததாக கூறு வதை, ஏற்க முடியாது. கனரக வாகனங்கள் உள்ளிட்ட, அனைத்து வாகனங்களும் பயணிக்க தான், சாலை உள்ளது.மனுதாரர் கூறியதை ஏற்றால், சாலை அமைத்த பின், சைக்கிள் தவிர, வேறு எந்த வாகனங்களும் செல்ல கூடாது. சைக்கிள் செல்ல, சகதியான சாலை கூட போதும். அதற்கு, தார் ரோடு தேவையில்லை.

மனுதாரருக்கு இருக் கும், ஒரு வாய்ப்பு என்னவென்றால், அதிகாரி களுக்கு, 'கமிஷன்' என்ற வகையில் கொடுத்த பணத்தை பெற்று, அதை வைத்து, சாலை அமைக்க வேண்டியது தான்.
கமிஷன் கொடுப்பது என்பதும், லஞ்சம் தான். பல்வேறு மட்டங்களில், கமிஷன் வழங்கவில்லை என்றால், பல விஷயங்கள் நடப்பதற்கு வாய்ப்பில்லை. இது, துரதிருஷ்டவசமானது தான். இந்த வழக்கும் அதுபோன்று இருக்கலாம்.

அதை முகாந்திரமாக கொண்டு, மனுதாரர் நிவாரணம் கேட்க முடியாது. பணிகள் நடப்பதற்காக மனுதாரர், பணம் கொடுத்திருந்தால் அதுவும் குற்றம் தான்.எனவே, மனு தள்ளுபடி செய்யப் படுகிறது. ஆசியநாடுகளில், ஊழல் மிகுந்த நாடாக, இந்தியா இருப்பதாக, ஓர் ஆய்வில் குறிப்பிடப் பட்டிருப்பதாக, நீதிபதி, கிருபாகரன், ஒரு வழக்கில் மேற்கோள் காட்டியிருந்தார்.அதை பார்க்கும்போது, ஊழல் மாநில வரிசையில், தமிழகம் முதலாவதாக வர, வாய்ப்பு உள்ளது.

பெரும்பாலான சாலைகள், தரம் குறைந்து

அமைக்கப் படுகின்றன. பொது மக்கள் பணம், தவறாக பயன்படுத்தப் படுகிறது. 'டெண்டர்' பெறுவ தற்காக, அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டியதுள்ளது. அதனால், பணம் சம்பாதிப்பதற்காக, தரம் குறைந்த பொருட் களை பயன்படுத்தி, சாலை அமைக்கின்றனர். அந்த சாலை, விரைவில் சேதமடைகிறது. அதனால், சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு, விபத்துகளுக்கு வழி ஏற்படுகிறது. இதை, ஒப்பந்ததாரர்கள் பொருட் படுத்துவதில்லை.

சாலைகளை முறையாக அமைக்கவும், பரா மரிக்கவும், கமிஷன் என்ற பெயரில் யாரும் பணம் பெறக் கூடாது. அவ்வாறு பெறுவது, லஞ்சம் பெறுவதாகும். சாலை அமைப்பதற்கு முன், மாநகராட்சி, குடிநீர் வாரியம், மின் வாரியம், தொலைபேசி துறை அதிகாரிகள் ஆகியோர், ஒன்று சேர்ந்து முடிவெடுக்க வேண்டும்.பூமிக்கு அடியில் குழாய்கள் பதிப்பு பணியை முடித்த பின், இறுதியாக, சாலை அமைக்கலாம். அப்போது, சாலைகளில் சேதாரம் ஏற்படாது.

ஒவ்வொருவரும், பூமியை உடலாக கருத வேண்டும்.ஒரே இடத்தில், பல முறை அறுவை சிகிச்சை நடந்தால், உயிரோடு இருப்பது சாத்தியமா என்பதையும், ஒவ்வொருவரும் நினைத்து பார்க்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024