Sunday, December 24, 2017

எம்.ஜி.ஆர்., நினைவு நாளில் எப்படி வருமோ முடிவு!

Added : டிச 24, 2017 00:56

எம்.ஜி.ஆர்., நினைவு தினமான இன்று, ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு வெளியாக உள்ளது. முடிவு எப்படி இருக்குமோ என்ற பயத்தில், அ.தி.மு.க.,வினர் உள்ளனர்.

எம்.ஜி.ஆரின், 30ம் ஆண்டு நினைவு தினம், இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று காலை, 8:00 மணிக்கு, சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள, எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்த உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள், திரளாக பங்கேற்க உள்ளனர். அதேபோல், இன்று காலை, 8:00 மணிக்கு, சென்னை, ராணிமேரி கல்லுாரியில், ஆர்.கே.நகர் ஓட்டு எண்ணிக்கை துவங்குகிறது. ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க., சந்தித்துள்ள முதல் இடைத்தேர்தல். இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் தான், ஆட்சியையும், கட்சியையும் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதால், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், தேர்தல் பணியில் தனிக் கவனம் செலுத்தினர்.

இந்த தேர்தலில் வெற்றி பெறாவிட்டால், அரசியல் கனவு கலைந்து விடும் என்பதால், சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன், பணத்தை வாரி இறைத்தார். அவரால், அ.தி.மு.க.,வின் வெற்றி பறிபோகும் என, கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக, அ.தி.மு.க.,வினர், திக்... திக்... மனநிலையில், தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்தபடி உள்ளனர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024