Sunday, December 24, 2017

கால்நடை தீவன ஊழலில் லாலு குற்றவாளி தீர்ப்பை அடுத்து உடனடியாக சிறையில் அடைப்பு

ராஞ்சி:'கால்நடை தீவன ஊழல் வழக்கில், பீஹார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான, லாலு பிரசாத் யாதவ் மற்றும், 15 பேர் குற்றவாளிகள்' என, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.



இவர்களுக்கு, வரும், 2018, ஜனவரி, 3ம் தேதி, தண்டனை விபரம் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தீர்ப்பை அடுத்து, லாலு பிரசாத் யாதவ், உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார். பீஹாரில், முதல்வர், நிதிஷ் குமார் தலைமை யில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில முதல்வராக, 1994 - 1996ல், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர், லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது, கால்நடை தீவனம் வாங்கியதாக போலி

பில்கள் கொடுத்து, அரசு கருவூலத்தில் பணம் எடுத்து, மோசடி நடந்ததாக புகார்கள் எழுந்தன.

5 ஆண்டு சிறை:

இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தொடர்புள்ள அனைத்து வழக்குகளும், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தன.பீஹாரின் சாய்பாசா கருவூலத்தில், 37.7 கோடி ரூபாய் எடுத்து, மோசடி செய்த வழக்கில், 2013ல் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், லாலுவுக்கு, ஐந்தாண்டு சிறைத் தண்டனை, 25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில், சில மாதங்கள்தண்டனை அனுபவித்த லாலு, பின், ஜாமினில் வந்தார்.

'கால்நடைத் தீவன வழக்கில் தண்டனை வழங்கப் பட்டதால், அதுதொடர்பான பிற வழக்குகளை விசாரிக்கத் தேவையில்லை' என, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம், 2014ல் தீர்ப்பளித்தது.இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில், 'கால்நடை தீவனம் தொடர்புள்ள, மேலும் நான்கு வழக்குகளை லாலு சந்திக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில்,

பீஹாரின் தியோகர் மாவட்ட கருவூலத்தில், 89.27 லட்சம் ரூபாய் எடுத்து, மோசடி செய்தது தொடர்பான வழக்கின் விசாரணை முடிவடைந்தது.

இதையடுத்து, ராஞ்சியில் உள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சிவ்பால் சிங், நேற்று தீர்ப்பளித்தார்.அப்போது, 'லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி' என, நீதிபதி அறிவித்தார். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும், 15 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கில், பீஹார் மாநில முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, ஜகன்னாத் மிஸ்ரா உட்பட, ஆறு பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் தண்டனை விபரம், 2018, ஜன., 3ல் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தீர்ப்பை அடுத்து, லாலு பிரசாத் யாதவ் உடனடியாக கைது செய்யப்பட்டு, ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.
பலத்த பாதுகாப்பு

இதையடுத்து, அந்த சிறைச்சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன. இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக, ராஷ்ட்ரீய ஜனதாதளம் மூத்த தலைவர், ரகுவன்ஷ் பிரசாத் சிங் கூறியுள்ளார்.கால்நடை தீவனம் வாங்கியதில் நடந்த மோசடி தொடர்பான ஒரு வழக்கில், ஏற்கனவே ஐந்தாண்டு சிறைத் தண்டனை பெற்று, தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை, லாலுவுக்கு உள்ளது.

இந்நிலையில், மேலும் ஒரு வழக்கில், குற்ற வாளி என அறிவிக்கப்பட்டுள்ளதால், லாலு பிரசாத் யாதவின் அரசியல் எதிர்காலம் கேள்வி குறியாகி உள்ளது. லாலு மீதான, இன்னும் 3 வழக்குகளின் விசாரணை, கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...