மாணவியின் கனவு நிறைவேற காரில் அமர வைத்த கலெக்டர்!
Added : டிச 25, 2017 22:38 |
செய்யாறு: அதிக மதிப்பெண் எடுத்த மாணவியின் கனவை நிறைவேற்றும் வகையில், தன் காரின் இருக்கையில் அமர வைத்து, 'நீயும் என்னைப்போல் கலெக்டராக வேண்டும்' என, கலெக்டர் கந்தசாமி ஊக்கப்படுத்தினார்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சிப்காட்டில், அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவியருக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடந்தது.
பாராட்டு
மாணவ - -மாணவியருக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கி கலெக்டர் கந்தசாமி பாராட்டினார்.அப்போது, செய்யாறு அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் மாணவி மோனிஷா, கடந்த, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 491 மதிப்பெண் பெற்றதால், அவருக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசை கலெக்டர் வழங்கி பாராட்டினார். அப்போது கலெக்டரிடம் மோனிஷா, ''நானும் உங்களைப்போல் கலெக்டராக வேண்டும்; அதுதான் என் லட்சியம்,'' என்றார்.
இதை கேட்ட கலெக்டர், பரிசளிப்பு விழா முடிந்ததும், மாணவி மோனிஷாவை அழைத்து, தன் சைரன் பொருத்திய அரசு காரில், தான் உட்காரும் இடத்தில் அமர வைத்து, அருகில் கலெக்டர் நின்று போட்டோ எடுத்துக் கொண்டார்.
நெகிழ்ச்சி
அந்த புகைப்படத்தை மாணவியிடம் காண்பித்து, 'இதை பார்க்கும்போது, நீயும் என்னைப்போல் கலெக்டராக வேண்டும் என்ற எண்ணம் உன்னுடைய மனதில் உதிக்க வேண்டும்' என்று கூறி, ஊக்கப்படுத்தினார்.
மேலும் அவர் கூறுகையில், ''நானும் உன்னைப்போல் அரசு பள்ளியில் படித்துத் தான், கலெக்டர் பதவியை வகித்து வருகிறேன்,'' என்றார். கலெக்டரின் இந்த செயல்பாடு, மாணவியை நெகிழ்ச்சியடைய செய்தது.

No comments:
Post a Comment