பிரதமர் பற்றி துணைவேந்தர் விமர்சனம்? : விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Added : பிப் 16, 2018 01:41
மதுரை: பிரதமர் நரேந்திர மோடி பற்றி தகாத வார்த்தைகளால்,திண்டுக்கல் காந்தி கிராமம் பல்கலை துணைவேந்தர்பேசியதாக அளித்த புகாரை, போலீசார் விசாரிக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.காந்தி கிராமம், கிராமிய பல்கலையின் ஆவணப் பிரிவு எழுத்தர் ராஜு தாக்கல் செய்த மனு:காந்தி கிராமம் கிராமிய பல்கலை துணைவேந்தர், நடராஜன். இவரை, 2017 நவ., 16ல் சந்திக்கச் சென்றேன். என் பதவி உயர்வுதொடர்பாக, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஆவணங்கள் மற்றும் அது தொடர்பாக, பிரதமர் அலுவலகம், மத்தியமனிதவளத் துறை அமைச்சகம், பல்கலை மானியக் குழுவிடம் இருந்து வந்த கடித விபரங்களைகூறினேன்.அவர், 'இப்பல்கலையில், முடிவெடுக்கும் பொறுப்பு என்னிடமே உள்ளது. பிரதமரோ, மனிதவளத் துறையோ அல்ல.நீங்கள், பா.ஜ.,வைச் சேர்ந்தவரா' என்றார்.என்னை மற்றும் பிரதமர் பற்றி தகாத வார்த்தைகளைக் கூறி மிரட்டல்விடுத்தார். திண்டுக்கல், எஸ்.பி., மற்றும் அம்பாதுரை போலீசில், நவ., 17ல் புகார் செய்தேன். வழக்குப் பதிவு செய்ய, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனு செய்திருந்தார்.நீதிபதி பி.ராஜமாணிக்கம், ''புகாரை அம்பாதுரை போலீசார் விசாரிக்க வேண்டும். முகாந்திரம் இருக்கும் பட்சத்தில்,சட்டத்திற்குட்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.*****

No comments:
Post a Comment