Friday, February 16, 2018

பல்கலைகளில் முறைகேடு : சென்னையில் இன்று விசாரணை

Added : பிப் 16, 2018 02:20

ஊழல் முறைகேடுகள் குறித்து, பல்கலை துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களிடம், சென்னையில் இன்று விசாரணைநடக்கிறது. பல்கலைகளில் நடந்த முறைகேடுகள் குறித்து, விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய, உயர் கல்வித்துறைக்கு, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அனைத்து பல்கலைகளின் துணை வேந்தர்கள்,பதிவாளர்கள் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூட்டம்,சென்னையில் உள்ள, தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தில்நடக்கிறது.இதில், உயர் கல்வி அமைச்சர், அன்பழகன், உயர் கல்வி முதன்மை செயலர், சுனில் பாலிவால் பங்கேற்று, துணைவேந்தர்கள் மற்றும் அதிகாரிகளிடம், விசாரணை நடத்த உள்ளனர். பல்கலைகளின் நிதியை செலவு செய்தது, புதிய திட்டங்களின் செயல்பாடுகள், பணிநியமனங்களில் பின்பற்றப்பட்ட விதிகள், இதுவரை நிரப்பப்பட்ட காலியிடங்கள் போன்றவை குறித்து, துணைவேந்தர்களிடம் விசாரிக்கப்பட உள்ளது.

பின், அதுபற்றிய அறிக்கை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பப்படும் என,தெரிகிறது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 30.10.2024