Thursday, October 11, 2018

மொட்டை கடிதத்தின் மேல் நடவடிக்கை தேவையில்லை : அரசு உத்தரவு

மத்திய அரசு துறைகளின் கீழ் பணிபுரியும் உயரதிகாரிகளுக்கு
எதிராக புகார் அளிப்பவர்களின் பெயர் மற்றும் பிற விவரங்கள் இல்லாமல் வரும் மனுக்கள் மற்றும் கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேற்கண்ட உத்தரவு குறித்து மத்திய தனிநபர் பயிற்சித்துறை அமைச்சகம், அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள அதிகாரிகள் உயர் பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அல்லது வேறு முக்கிய துறைகளில் நியமனம் செய்ய ஆலோசனை நடக்கும் போது, பெயர் குறிப்பிடாத நபர்களின் புகார்கள் அல்லது முழுமை பெறாத குற்றச்சாட்டுகளுடன் கடிதங்கள் அதிகளவு வருவது வழக்கம்.

உண்மை தன்மை குறித்து ஆராயும் அளவிற்கு கூட பல சமயங்களில் புகார்கள் இருப்பதில்லை. எனவே புகார் அளிப்பவரின் விவரங்கள் இல்லாமல் மொட்டை கடிதம் வமீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை. அதனை பதிவு செய்தால் போதும் என மத்திய தனிநபர் பயிற்சித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக கூறினர். இதே உத்தரவை, சிவிசி எனப்படும், மத்திய கண் காணிப்பு ஆணையமும் அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ளது
 
 

No comments:

Post a Comment

HC orders govt to issue recognition to nursing colleges

HC orders govt to issue recognition to nursing colleges  16.11.2024 TIMES OF INDIA BHOPAL. Bhopal/Jabalpur : A division bench of MP high cou...