Thursday, October 11, 2018

அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்: வைரமுத்து

By Raghavendran | Published on : 10th October 2018 02:29 PM |




தொடரும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் கவிஞர் வைரமுத்து தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

அதில், அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும் என்று பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து சில நிமிடத்திலேயே, பாடகி சின்மயி "பொய்யர்" என்ற விமர்சனத்துடன் வைரமுத்துவின் ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024