Thursday, October 11, 2018

துணைவேந்தர்களை நியமித்த  கவர்னர்கள் யார்?

dinamalar 11.10.2018

கோடிகளை கொட்டி, துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டதாக எழுந்த புகார், பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில், எந்த கவர்னரின் காலத்தில், எந்தெந்த துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டனர் என்ற பட்டியலை, கல்வியாளர்கள் திரட்டி வருகின்றனர்.



துணைவேந்தர் பதவியை பெறுவது, ஒவ்வொரு பேராசிரியருக்கும் வாழ்க்கையின் லட்சியமாகவும், கனவாகவும் உள்ளது. இதில், அரசியல் மற்றும் அரசின் செல்வாக்கு உள்ளவர்களையே துணைவேந்தர்களாக நியமிக்கும் முறை, 2006ல் துவங்கியது. இந்த நடைமுறையால், முன்னாள், இந்நாள் துணைவேந்தர்கள் மீது, ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பதவியேற்புக்கு பின், துணைவேந்தர் நியமன முறைகளில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கல்வி மற்றும் நீதித்துறை வல்லுனர்கள் தேடல் குழுவில் நியமிக்கப்படுகின்றனர். விண்ணப்பித்தவர்களின் பின்னணி, கிரிமினல் மற்றும் ஊழல் வழக்குகள் உள்ளதா... என, விசாரிக்கப்படுகிறது.

'தற்போது, தகுதி மற்றும் திறமை அடிப்படையில் மட்டுமே, துணைவேந்தர்கள் நியமிக்கப்படுகின்றனர்' என, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தமிழக பல்கலைகளில், எந்த துணைவேந்தர்கள், எந்த கவர்னரால் நியமிக்கப்பட்டனர் என்ற விபரங்களை, கல்வியாளர்கள் திரட்டி வருகின்றனர்.

புரோஹித் நியமித்தோர் :

அண்ணா பல்கலை: எம்.கே.சுரப்பா
தமிழ்நாடு சட்ட பல்கலை: தம்ம சூர்யநாராயண சாஸ்திரி
தமிழ்நாடு கால்நடை பல்கலை: சி.பாலச்சந்திரன்
தமிழ்நாடு உடற்கல்வி பல்கலை: ஷீலா ஸ்டீபன்
பாரதிதாசன் பல்கலை: பி.மணிசங்கர்
பெரியார் பல்கலை: பி.குழந்தைவேல்
அண்ணாமலை பல்கலை: வி.முருகேசன்
அழகப்பா பல்கலை: என்.ராஜேந்திரன்
தஞ்சை தமிழ் பல்கலை: ஜி.பாலசுப்ரமணியன்

முதல்வரின் நியமனம்:

தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலை: பிரமீளா குருமூர்த்தி. அனைத்து பல்கலைகளுக்கும் கவர்னரே வேந்தராக இருப்பார். ஆனால், கவின் கலை பல்கலையின் விதிகளின்படி, தமிழக முதல்வரே வேந்தர். இதன்படி, முதல்வர் பழனி சாமியால், இசை பல்கலையின் துணைவேந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வித்யாசாகர் நியமித்தோர் :

சென்னை பல்கலை: பி.துரைசாமி

தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வள பல்கலை: எஸ்.பெலிக்ஸ்
மதுரை காமராஜர் பல்கலை: பி.பி.செல்லதுரை - நியமன விதிமீறலால் பதவி நீக்கம்.

ரோசய்யா நியமித்தோர் :

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை: எம்.பாஸ்கரன்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை: கே.பாஸ்கர்
திருவள்ளுவர் பல்கலை: கே.முருகன்
தமிழ்நாடு கல்வியியல் பல்கலை: எஸ்.தங்கசாமி
தெரசா மகளிர் பல்கலை: ஜி.வள்ளி
கோவை பாரதியார் பல்கலைக்கழகம்: ஏ.கணபதி - ஊழல் வழக்கில், 'சஸ்பெண்ட்'
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகம்: டாக்டர் எஸ்.கீதாலஷ்மி - இவரது பதவி காலம் முடிய உள்ளது.
தமிழ்நாடு வேளாண் பல்கலை: கே.ராமசாமி - இவரது பதவி காலம் முடிய உள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Punjab’s NRI quota criteria a ‘fraud’ on education system:SC

Punjab’s NRI quota criteria a ‘fraud’ on education system: SC Dhananjay.Mahapatra@timesofindia.com 25.09.2024  New Delhi : Supreme Court on ...