ரயிலில் அடிபட்டு 3 சிங்கங்கள் பலி
Added : டிச 19, 2018 00:32 |
ஆமதாபாத்: குஜராத் மாநிலத்தில், கிர் சரணாலய பகுதியில், சரக்கு ரயிலில் அடிபட்டு, மூன்று சிங்கங்கள் உயிரிழந்தன.குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, கிர் தேசிய வனவிலங்கு சரணாலயத்தில், 534 ஆசிய சிங்கங்கள் பாதுகாக்கப்படுகின்றன.அம்ரேலி மாவட்டத்தில் உள்ள சரணாலய பகுதியில் மட்டும், 174 சிங்கங்கள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சரணாலயத்தை ஒட்டியுள்ள பகுதியில் சென்ற சரக்கு ரயிலில் அடிபட்டு, ஒரு பெண் சிங்கம் உட்பட, மூன்று சிங்கங்கள் உயிரிழந்தன. இதுகுறித்து, விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment