Wednesday, December 19, 2018

மதுரையில் 'எய்ம்ஸ்' அடிக்கல் நாட்டு விழா:

ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடி வருகை

மதுரை,: 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவது உட்பட வளர்ச்சித் திட்டங்களை துவக்க வரும் ஜனவரியில் பிரதமர் மோடி மதுரை வருகிறார்.



தென் மாவட்ட மக்கள் உயர்தர சிகிச்சை பெற ஏதுவாக மதுரை தோப்பூரில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து மருத்துவமனை அமைக்க ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன.மத்திய அரசு சார்பில் தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடக்கின்றன. மதுரையில் 150 கோடி ரூபாயில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி

மருத்துவமனை கட்டப்பட்டு முடியும்நிலையில் உள்ளது. மதுரை- -துாத்துக்குடி இரட்டை அகல ரயில் பாதை பணிகள், ராமேஸ்வரம் ரயில்பாதை மின்மயமாக்க பணிகள் துவங்கவுள்ளன. 1,000 கோடி ரூபாயில் மாநகராட்சியில் ஸ்மார்ட்சிட்டி திட்ட பணிகள், 1,400 கோடி ரூபாயில் 'அம்ரூட்' திட்ட பணிகள் துவங்கவுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு மதுரையில் ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவதுடன், சில திட்டங்களை துவக்கியும் வைக்கிறார்.அடுத்த ஆண்டு மே லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளதால் பிப்ரவரியில் தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட வாய்ப்புகள் உள்ளன. அதற்கு முன்பாக 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா நடத்தவும் மத்திய, மாநில அரசுகள்திட்டமிட்டுள்ளன.பா.ஜ., மாநில செயலர் ஸ்ரீநிவாசன், ''எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடிபங்கேற்பது உறுதி. ஆனால் தேதி முடிவாகவில்லை,'' என்றார்.

ரூ.5 ஆயிரம் கோடி

திருமங்கலத்தில் அமைச்சர்

உதயகுமார் கூறுகையில், ''தோப்பூரில் 260 ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு முதற்கட்டமாக 1,248 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மருத்துவமனை கட்டுமான பணிக்கு மட்டும் இந்த நிதி. மருத்துவக் கல்லுாரி, விடுதி, குடியிருப்பு கட்டடம், மருத்துவ உபகரணங்கள் செலவு என மொத்தம் மத்திய, மாநில அரசுகள் 5,000 கோடி ரூபாய் செலவு செய்யும்,'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024