மகாத்மாகாந்தி மருத்துவ கல்லுாரியில் அறிவுக் களஞ்சியம் துவக்க விழா
Added : டிச 19, 2018 23:32
பாகூர்:கிருமாம்பாக்கம் அடுத்துள்ள பிள்ளையார்குப்பம் பாலாஜி வித்யா பீத் பல்கலைக்கழகத்தில், மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், 'பாலாஜி வித்யா பீத் - அறிவு களஞ்சியம்' துவக்கப் பட்டுள்ளது.இதன் வாயிலாக, இரண்டு மாதத்திற்கு ஒரு முறை, சொற்பொழிவு, கலந்துரையாடல், நேருக்கு நேர் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. துவக்க விழாவில், மகாத்மா காந்தி மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன டீன் டாக்டர் ரவிசங்கர் தலைமை தாங்கினார். துணைவேந்தர் டாக்டர் பரிஜா, 'பாலாஜி வித்யா பீத் அறிவு களஞ்சியத்தின் 'லோகோ' வெளியிட்டார்.அறிவு களஞ்சியத்தின் முதல் நிகழ்வில், அரபிந்தோ சர்வதேச கல்வி மையத்தின் ஆங்கில மற்றும் தத்துவத் துறை பேராசிரியர் மனோஜ்தாஸ் கலந்துகொண்டு, 'வாழ்க்கை தத்துவத்தின் புதிர்' என்ற தலைப்பில் பேசினார்.பின்னர், 'நம் முடிவை வெற்றி கொள்வது எப்படி' என மாணவர்களுடன் கலந்துரையாடினார். கல்லுாரி துணை முதல்வர் டாக்டர் பார்த்தா நந்தி தொகுப்புரையாற்றினார். மருத்துவ மாணவர்கள், பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment