Wednesday, December 12, 2018

Ambani daughters marriage

`
‘ஆசியாவிலேயே மிகவும் விலை உயர்ந்த திருமணம்’ - சாதனை படைத்த அம்பானி மகள் திருமணம்

விகடன் 11.12.2018

ஆசியாவின் மிக விலை உயர்ந்த திருமணம்' என்ற சாதனையைப் படைத்துள்ளது, அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமணம். 

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், பெரும் தொழிலதிபர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும், நாளை மும்பையில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக, 8 முதல் 10-ம் தேதி வரை ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள அரண்மனையில் திருமணச் சடங்குகள் நடைபெற்றன. இதில் உலகப் பிரபலங்கள், பாலிவுட் நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் எனப் பல ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர். 

இஷாவின் திருமணத்துக்காக அடிக்கப்பட்ட அழைப்பிதழின் விலையே ரூ.3 லட்சம். திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் அம்பானியின் விருந்தினர்களுக்காக உதய்பூரில் உள்ள மொத்த நட்சத்திர ஹோட்டல்களும் மூன்று நாள்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. உதய்பூர் விமான நிலையத்தில் பெரிய அளவில் போக்குவரத்து இருக்காது. ஒரு நாளைக்கு 19 லேண்டிங் மற்றும் டேக் ஆஃப்தான் உண்டு. அம்பானி மகள் திருமணத்துக்காக 100 தனியார் விமானங்கள் புக் செய்யப்பட்டிருந்தன. மேலும் ஜாகுவார், பி.எம். டபிள்யூ, மெர்ஸிடெஸ் பென்ஸ், ஆடி கார்கள் மட்டும் 1000 கார்கள் உதய்பூர் நகரங்களில் வலம் வந்தன. மூன்று நாள் கொண்டாட்டத்தில், சுமார் 5,100 விருந்தினர்கள் கலந்துகொண்டுள்ளனர். இவர்களுக்கு, மூன்று நாளும் மூன்று வேளைக்கு பல வகையான உணவுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், விருந்தினர்களைக் கவர 108 விலைமதிப்பு மிக்க பாரம்பர்ய ஓவியங்களும் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இஷா அம்பானியின் திருமணத்துக்காக மட்டும் சுமார் 100 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 37 வருடங்களுக்கு முன்னர் நடந்த இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் டயானாவின் திருமணத்துக்கு 110 மில்லியன் டாலர் (தற்போதைய மதிப்பு) செலவிடப்பட்டுள்ளது. தற்போது, அந்த மதிப்பை இஷா அம்பானி திருமணம் நெருங்கியுள்ளது. இதனால், ஆசியாவிலேயே விலையுயர்ந்த திருமணம் எனப் பெயர் பெற்றுள்ளது இஷா அம்பானியின்  திருமணம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024