Wednesday, December 12, 2018

வெற்றிகரமான தோல்வி: தமிழிசை

Added : டிச 11, 2018 23:19






சென்னை: ''பா.ஜ., வெற்றி பெற்ற போதெல்லாம், இயந்திரத்திற்கு வாழ்த்து கூறிய காங்கிரஸ், மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர், தமிழிசை தெரிவித்தார்.அவர் நேற்று அளித்த பேட்டி:எந்த தோல்வியும், எங்களை துவளச் செய்யாது. மிகப்பெரிய வெற்றியை, லோக்சபா தேர்தலில் பெறுவோம். ஐந்து மாநில தேர்தல், எந்த விதத்திலும் தோல்வி அல்ல. ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில், வெற்றிகரமான தோல்வி என்று, எடுத்துக் கொள்ளலாம். சத்தீஸ்கரில், 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததால் அதிருப்தி.தெலுங்கானாவில், எதிர்க்கட்சி கூட்டணி தோல்வி அடைந்துஉள்ளது. பா.ஜ., வெற்றி பெற்றால், 'ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு' என, குற்றம் சாட்டுவர். பா.ஜ., வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறாமல், இயந்திரத்திற்கு வாழ்த்து கூறிய காங்கிரஸ், மன்னிப்பு கேட்க வேண்டும். ஏனெனில், அதே ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி தான், அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.மாநில தீர்ப்புகள், அந்தந்த மாநிலங்களின் பிரதிபலிப்பு; லோக்சபா தேர்தல் பிரதிபலிப்பு அல்ல. பா.ஜ., மோசமான தோல்வியை அடையவில்லை. காங்கிரசுக்கு மிகக் கடுமையான போட்டியை ஏற்படுத்தி உள்ளோம்.மோடி அலையை ஓய வைக்கவே முடியாது. லோக்சபா தேர்தலில், மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். இந்த தோல்வியிலும், எங்களுக்கே அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளன. அகில இந்திய நிர்வாகிகள் மற்றும் மாநில தலைவர்கள் கூட்டம், நாளை டில்லியில் நடக்க உள்ளது. இதில், லோக்சபா தேர்தல் வெற்றி குறித்து ஆலோசிப்போம்.இவ்வாறு, தமிழிசை கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024