Saturday, December 1, 2018


ஜெ., மரண விசாரணை: அரசு மருத்துவமனை டீன் விளக்கம்

Added : டிச 01, 2018 00:58

சென்னை, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக, அப்பல்லோ டாக்டர்கள் அளித்த முரண்பட்ட வாக்குமூலம் தொடர்பாக சென்னை, அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனை முதல்வரிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.ஜெ., மரணம் குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரித்து வருகிறது. இதுவரை, 120க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஜெ.,க்கு, 2016 டிச., 4ம் தேதி மாரடைப்பு ஏற்பட்ட பின், அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, 'எக்மோ' கருவி பொருத்தப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், முரண்பட்ட வாக்குமூலம் அளித்துள்ளனர். இது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.இந்நிலையில், சென்னை, அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனையில், 2016ல், இருந்த வசதிகள் குறித்த விபரங்களை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி, மருத்துவமனை முதல்வர் ஜெயந்திக்கு, விசாரணை கமிஷன் உத்தரவிட்டிருந்தது.அதை ஏற்று, மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்த விபரங்கள் அடங்கிய ஆவணங்களை, மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி, நேற்று விசாரணை கமிஷனில், தாக்கல் செய்தார். அப்போது அவரிடம், 'எக்மோ' கருவி பொருத்தும் போது, என்ன செய்வர் என்ற விபரத்தை, நீதிபதி கேட்டார்.அதற்கு பதில் அளித்த ஜெயந்தி, அரசு மருத்துவமனையில், இதுபோன்ற சிகிச்சை அளித்ததில்லை. 'நான் படித்ததன் அடிப்படையில், எவ்வாறு செய்வர் என்பதை கூறுகிறேன்' எனக்கூறி, விளக்கம் அளித்துள்ளார்.அரசு மருத்துவமனையில், ஜெ.,வை அனுமதிக்காமல், அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தது ஏன் என்பதை அறியவே, அரசு மருத்துவமனை வசதிகள் குறித்த விபரங்களை, விசாரணை கமிஷன் கேட்டுள்ளது.இது தவிர, அப்பல்லோ டாக்டர் சாந்தி, இ.இ.ஜி., டெக்னிஷியன் புனிதா ஆகியோரிடமும், நேற்று விசாரணை நடத்தப்பட்டது.

சசி உறவு டாக்டருக்குஐந்தாவது 'சம்மன்'

சசிகலாவின் உறவினரான, டாக்டர் சிவகுமாரிடம், ஏற்கனவே நான்கு முறை, விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஐந்தாவது முறையாக, நாளை மறுதினம், விசாரணை கமிஷனில் ஆஜராகும்படி, அவருக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டுஉள்ளது.டிச., 4ல், அப்பல்லோ மருத்துவமனை தோல் சிகிச்சை நிபுணர் முரளிதர் ராஜகோபால், தனியார் மருத்துவமனை டாக்டர் பார்வதி பத்மநாபன்; டிச., 5ல், அப்பல்லோ மருத்துவமனை தோல் சிகிச்சை நிபுணர் ரவிச்சந்திரன், நரம்பியல் நிபுணர் மீனாட்சிசுந்தரம்; டிச., 6ல், சுரப்பிகள்நிபுணர் சிவஞானசுந்தரம்; டிச., 7ல், இதய சிகிச்சை நிபுணர்கள் கிரிநாத், விஜயசந்திர ரெட்டி, ஸ்ரீதர் ஆகியோர் ஆஜராக, சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024