Monday, May 11, 2015

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் வழக்கு: ராமலிங்க ராஜு உள்பட 10 பேருக்கு ஜாமீன்!

ஹைதராபாத்: ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனர் ராமலிங்க ராஜு உள்பட 10 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் ரூ.7 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக கடந்த 2009ஆம் ஆண்டு புகார் எழுந்தது. இதையடுத்து, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனர் ராமலிங்க ராஜு, அவரின் சகோதரர்கள் ராமா ராஜூ, சூர்ய நாராயண ராஜு, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன முன்னாள் தலைமை நிதி அதிகாரி வத்லாமணி ஸ்ரீநிவாஸ், பி.டபிள்யூ.சி. ஆடிட்டர்கள் சுப்ரமணி கோபாலகிருஷ்ணன், ஸ்ரீநிவாஸ், ஊழியர்கள் ஜி.ராமகிருஷ்ணா, வெங்கட்பதி ராஜு, ஸ்ரீசைலம், இண்டர்னல் ஆடிட்டர் பிரபாகர் குப்தா ஆகிய 10 பேருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, செர்லாபல்லி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து, தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் அபராதத்தை நீக்குமாறும், தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரியும், 10 பேர் சார்பிலும் ஹைதராபாத் மாநகர செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி, ராமலிங்க ராஜூ உள்பட 10 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

ராமலிங்க ராஜூ மற்றும் அவரது சகோதரருக்கு ரூ.1 லட்சத்திற்கான தனிப்பட்ட பத்திரம் சமர்பிப்பதன் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், மீதமுள்ள குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேருக்கும் தலா ரூ.50 ஆயிரத்திற்கான பத்திரம் சமர்பிப்பதன் நிபந்தனையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024