Monday, May 11, 2015

ஜெயலலிதா விடுதலை சாத்தியம் ஆனது எப்படி?- 919 பக்க தீர்ப்பில் புரிதலுக்கு உதவும் 'எண்கள்'

சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலை செய்யப்படுவதற்கு உரிமை உடையவரே, அவரது வருவாய்க்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு 10%-க்கும் குறைவாகவே உள்ளது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார். மேலும், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். அதேபோல், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவையும் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி ரத்து செய்து உத்தரவிட்டார்.

919 பக்க தீர்ப்பில், ஜெ. விடுதலைக்கு முக்கியக் காரணங்களைச் சொல்லும் அம்சங்கள்:

சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலை செய்யப்படுவதற்கு உரிமை உடையவரே, அவரது வருவாய்க்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு 10%-க்கும் குறைவாகவே உள்ளது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

அரசு தரப்பு கூறியது போல் ரூ.66.65 கோடி வருவாய்க்கு மீறிய சொத்துக்களோ அல்லது சிறப்பு நீதிமன்றம் கணக்கின் படி வருவாய்க்கு மீறிய ரூ.53.6 கோடி சொத்துக்களோ அவரிடம் இல்லை, மாறாக, ஜெயலலிதா பெயரில் ரூ.2,82,36,812 மதிப்பளவே சொத்துக்கள் உள்ளன என்று கூறியுள்ளது கர்நாடக உயர் நீதிமன்றம்.

இன்று நீதிபதி குமாரசாமி அளித்த 919 பக்க தீர்ப்பில் “குற்றம்சாட்டப்பட்டவரின் சொத்துக்களுடன், நிறுவனங்கள் மற்றும் பிற சொத்துக்களை சேர்த்து கட்டுமான மதிப்பான ரூ.27,79,88,945 என்ற தொகையுடன் திருமண செலவு தொகையான ரூ.6,45,04,222-ஐயும் சேர்த்து அவரது சொத்து ரூ.66,44,73,573 என்று அரசு தரப்பு சேர்த்துக் கூட்டி சொத்து மதிப்பை நிர்ணயித்துள்ளது.

எனவே கூடுதலாக சேர்க்கப்பட்ட கட்டுமான மதிப்புத் தொகையையும், திருமண செலவு தொகையையும் நீக்கிவிட்டால், சொத்துக்கள் மதிப்பு ரூ.37,59,02,466 ஆக உள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவரின் சொத்துக்கள், நிறுவனங்கள் மற்றும் பிற வருவாயோ ரூ.34,76,65,654 ஆக உள்ளது. எனவே வருவாய்க்கு அதிகமாக ரூ.2,82,36,812 மதிப்புடைய சொத்துக்களே உள்ளன. வருவாய்க்கு அதிகமான சொத்துக்களின் சதவீதம் 8.12%. இது ஒப்பிடுகையில் மிகச்சிறிய தொகையே” என்று ஆவணங்களை ஆய்வு செய்ததில் கோர்ட் முடிவுக்கு வந்ததாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

கிருஷ்ணாநந்த் அக்னிஹோத்ரியின் சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் போது, வருவாய்க்கு மீறி 10% வரை அதிக சொத்துகள் வைத்திருக்கும் நபர்கள் விடுதலை செய்ய உரிமையுடையவர்களே என்று அறிவுறுத்தியிருந்ததை கர்நாடக உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பின் போது சுட்டிக் காட்டியது.

மேலும், ஆந்திர மாநில அரசு தனது சுற்றறிக்கை ஒன்றில் வருவாய்க்கு அதிகமாக 20% வரை சொத்துக்கள் வைத்திருப்பது அனுமதிக்கக் கூடியதே என்று தெரிவித்திருந்ததையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

“இந்த வழக்கில் வருவாய்க்கு அதிகமான சொத்து 10%-க்கும் குறைவாக உள்ளதோடு அனுமதிக்கப்பட்ட வரையறைக்குட்பட்டுதான் இருக்கிறது. எனவே குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலைக்கு உரியவரே. எனவே குற்றம்சாட்டப்பட்டோர் பட்டியலில் முதன்மையாக இடம்பெற்றவர் (ஜெயலலிதா) குற்றமற்றவர் எனும் போது சிறிய பங்கையாற்றிய குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களும் விடுவிப்புக்குரியவர்களே” என்று நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டவர் இந்தியன் வங்கியிடமிருந்து கடன் பெற்றார் என்றும், இதனை வருவாயாக நாம் சேர்க்க முடியாது என்றும் சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. எனவே, கடனை வருவாயாகக் கணக்கிடாமல் சிறப்பு நீதிமன்றம் தவறிழைத்தது” என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முழு எழுத்து வடிவம் - ஆங்கிலத்தில் - Text of Karnataka High Court's verdict on Jayalalithaa DA case |

No comments:

Post a Comment

NEWS TODAY 14,11,2024