Sunday, May 10, 2015

பாக்கி வைத்துள்ளோருக்கு பி.எஸ்.என்.எல்., கிடுக்கிப்பிடி


பில் பாக்கி வைத்திருப்போரின் போட்டோக்களை, அலுவலகம் மற்றும் சேவை மையங்களில் வெளியிட, பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.

பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில், தொலைபேசி இணைப்பு பெற்று, கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களிடம் பணம் வசூல் செய்ய, பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இணைப்பை துண்டிப்பது, முதற்கட்ட நடவடிக்கை. அடுத்து, ஊழியரை வீட்டுக்கு அனுப்பி, கட்டணம் செலுத்த அறிவுறுத்துவது, நீண்ட காலமாக பாக்கி வைத்திருப்போரிடம் நீதிமன்றம் மூலம் வசூலிப்பது என, நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது, பில் பாக்கி வைத்திருக்கும் வாடிக்கையாளர் பெயர், போட்டோ மற்றும் விவரங்களை, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் மற்றும் வாடிக்கையாளர் சேவை மையங்களில் விளம்பரப்படுத்த முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., நிறுவன உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: பில் பாக்கி வைத்திருப்போரிடம், கட்டணத் தொகையை வசூலிக்க, நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல்., கணக்கு அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, பாக்கி வைத்திருப்பவரின் வீட்டுக்கு நேரில் சென்று, நிலுவைத் தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கட்டண பாக்கி வைத்திருக்கும் வாடிக்கையாளர் விவரத்தை, போட்டோவுடன் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024