Friday, May 8, 2015

சேது' பெயரில் ஓடிய அனந்தபுரி எக்ஸ்பிரஸ் : பயணிகள் குழப்பம்

அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில், 'சேது எக்ஸ்பிரஸ்' என்ற பெயர் பலகையுடன் ஓடியதால், ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகினர்.
சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் இடையே, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து, சென்னை எழும்பூர் வரும் சேது எக்ஸ்பிரஸ் ரயில் தான், மாற்று ரயிலாக தினசரி இரவில், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலாக, எழும்பூரில் இருந்து இயக்கப்படுகிறது.
குழப்பம்
அப்போது, ரயில் முகப்பு பகுதியில் உள்ள, 'சேது எக்ஸ்பிரஸ்' என்ற பெயர் பலகை மாற்றப்பட்டு, 'அனந்தபுரி எக்ஸ்பிரஸ்' என்ற பெயர் பலகை வைப்பர்.
நேற்று முன்தினம் இரவு, 7:35 மணிக்கு, வழக்கம் போல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது.
இருப்பினும், ரயில் முகப்பு பகுதியில் பெயர் பலகையை மாற்றாமல் விட்டனர்.
இதனால், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில், அனந்தபுரி எக்ஸ்பிரஸ்
ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் குழப்பம் அடைந்தனர்.
அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து விட்டதாக தகவல் தெரிவித்தாலும், நிற்பது சேது
எக்ஸ்பிரஸ் ரயில் தானே என, பலரும் குழப்பமடைந்தனர். ரயில் புறப்படும் நேரத்தில், சிலர் உண்மை புரிந்து அவசர அவசரமாக ரயிலில் ஏறினர்.
இதுகுறித்து, தாம்பரத்தைச் சேர்ந்த பயணி, கீதாலட்சுமி என்பவர் கூறியதாவது:
தாம்பரம் ரயில் நிலையத்திற்குள், 'சேது' என்ற பெயர் பலகையுடன் தான், ரயில் உள்ளே வந்தது; இதனால், குழப்பம் அடைந்தோம். என் உறவினர், இந்த ரயிலில் எழும்பூரில் இருந்து வந்தார்.
விசாரணைஅவர் தந்த தகவலினால் தான், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் என, தெரிய வந்தது; இல்லையென்றால், ரயிலை தவற விட்டிருப்பேன். சில பயணிகள் ரயிலை தவற விட்டிருக்க கூட வாய்ப்பு இருந்திருக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.இதுகுறித்து, எழும்பூர் ரயில் நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பெயர் பலகையை மாற்றும் பணியை, மெக்கானிக்கல் பிரிவு ஊழியர்கள் மேற்கொண்டிருக்க வேண்டும்; இப்பிரச்னையில், என்ன தவறு நடந்தது என்பது குறித்து விசாரிக்கப்படும்; இனி, சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024