புதுடில்லி: மத்திய அரசின் புதிய சட்டத்தால், எரிவாயு மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் பெறும் பயனாளிகள், வருமான வரி செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். கடந்த வாரம், லோக்சபாவில், 2015ம் ஆண்டு நிதி மசோதா நிறைவேற்றப்பட்டது; அதில், 1961ம் ஆண்டு, வருமான வரிச் சட்டத்தின் கீழ், துணை பிரிவு சேர்க்கப்பட்டு, வருவாய்க்கான வரையறை விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, மானியங்கள், நிதியுதவி, ரொக்க ஊக்கத்தொகை, செலுத்திய வரியை திரும்ப பெறும் சலுகையில் பெறும் தொகை ஆகியவை, வருவாய் என, குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால், நேரடி மானிய திட்டத்தின் கீழ், சமையல் எரிவாயு மானியத்தை வங்கிக் கணக்கில் பெறுவோரும், தாங்கள் பெறும் மானியத்திற்காக வருமான வரி செலுத்த நேரிடும். அதேசமயம், இது வருமான வரி விலக்கு வரம்பான, 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் உள்ளவர்களுக்கே பொருந்தும். எனினும், மசோதாவில் சேர்க்கப்பட்ட, 'மானிய வருவாய்' என்ற சொற்றொடருக்கு, அரசு விளக்கம் அளித்தால் மட்டுமே, இந்த விஷயத்தில் தெளிவு கிடைக்கும் என, வருமான வரித் துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
●ஆண்டுக்கு, 12 எரிவாயு சிலிண்டர்களுக்கு, மானியம் வழங்கப்படுகிறது.
● இதன்படி, சராசரியாக, ஒரு சிலிண்டருக்கு, ஒருவர், 200 ரூபாய் வீதம், ஆண்டுக்கு, 2,400 ரூபாய் மானியம் பெறுவார்.
● அவர், உயர் வருவாய் பிரிவின் கீழ், வரி செலுத்துபவராக இருந்தால், எரிவாயு மானியம் பெற்ற வகையில், 600 ரூபாய்க்கும் அதிகமாக வரி செலுத்த வேண்டும்.

No comments:
Post a Comment