Thursday, July 14, 2016

சென்னை ஐஐடி மாணவி உட்பட 2 பெண்கள் தற்கொலை: போலீஸார் தீவிர விசாரணை



சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் நேற்றிரவு 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் உடல்களைக் கைப்பற்றிய போலீஸார் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர் கணேசன். இவர் ஐஐடி வளாகத்தில் உள்ள பேராசிரியர்கள் குடியிருப்பில் மனைவி, 2 மகன்களுடன் வசித்து வருகிறார். இவரது 2-வது மகன் சற்று மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது. பல இடங்களில் சிகிச்சை அளித்தும் அவரை குணப்படுத்த முடியவில்லை. அதனால் கணேசனும் அவரது மனைவி விஜயலட்சுமியும் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளனர். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதமும் நடந்துள்ளது.

இதனால் மன அழுத்தத்தில் இருந்த விஜயலட்சுமி (வயது 47) நேற்றிரவு வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த கோட்டூர்புரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விஜயலட்சுமியின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், விஜயலட்சுமி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினருடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி தற்கொலை

இதற்கிடையே ஐஐடி வளாகத்தில் உள்ள சபர்மதி மாணவியர் விடுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த போலீஸார், விடுதியில் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த அறையில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டுபிடித்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் மகேஸ்வரி என்பதும், அவர் புதுச்சேரியைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், விடுதியில் உள்ள மாணவிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி கூறும்போது, “ஆராய்ச்சி மாணவி தற்கொலை செய்து கொண்டது உண்மைதான். இது துரதிருஷ்டவசமானது. அதேபோல் பேராசிரியர் ஒருவரின் மனைவியும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்” என்றார்.

இது தொடர்பாக ஐஐடி நேற்றிரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ஐஐடி ஆராய்ச்சி மாணவியின் மரணம் துரதிருஷ்டவசமானது. இது பேரிழப்பாகும். அவரது மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இச்சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024