சென்னை: சுவாதி கொலை வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்படும் போது, தான் தற்கொலைக்கு முயலவில்லை என்று ராம்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவில் கூறப்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில், நெல்லை செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமாரை காவல்துறையினர் ஜூலை 1ம் தேதி கைது செய்தனர்.
இந்த நிலையில், ராம்குமார் தரப்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று வழக்குரைஞர் கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
மனுவில், சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை. காவல்துறையினருடன் வந்தவர்களே ராம்குமாரின் கழுத்தை அறுத்துள்ளனர்.
சுவாதி கொலைக்கும் ராம்குமாருக்கும் எந்த தொடர்பும் இல்லை. உண்மையான குற்றவாளியை காப்பாற்றவே, ராம்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சுவாதி கொலை செய்யப்படுவதற்கு முன்வே, அவரை யாரோ தாக்கியதாக தகவல்கள் வெளிவந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், எங்களுக்கு வந்த அறிவுரையின்படி ராம்குமாருக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளேன் என்றும் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment