ஸ்மார்ட்போனுக்கு நீங்கள் அடிமையா?
சைபர் சிம்மன்
தனிமையில் இருக்கும்போது ஸ்மார்ட்போனைத் தொடாமல் உங்களால் எத்தனை நேரம் இருக்க முடியும்? இதற்கான பதில் நொடிகளில் இருந்தால் உங்கள் ஊகம் சரியென வைத்துக்கொள்ளலாம். நிமிடங்கள் எனில் நீங்களும்கூட உங்கள் ஸ்மார்ட்போன் பழக்கம் பற்றி சரியாக அறிந்திருக்கவில்லை என முடிவுக்கு வர வேண்டும்.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஸ்மார்ட்போன் பயன்பாடு தொடர்பான ஆய்வு இந்த எண்ணத்தைத்தான் ஏற்படுத்துகிறது. வைரஸ் தடுப்பு சேவை நிறுவனமான காஸ்பெர்ஸ்கி லேப் சார்பில் வர்ஸ்பர்க் மற்றும் நாட்டிங்கம் டிரெண்ட் பல்கலைக்கழகங்கள் இந்த ஆய்வை நடத்தின.
இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் 44 நொடிகள்கூடத் தங்கள் போனில் கைவைக்காமல் இருக்க முடியவில்லை. பெண்களைப் பொறுத்தவரை 57 நொடிகள்வரை போனைத் தொடாமல் இருக்க முடிந்திருக்கிறது. ஆண்களோ 21 நொடிகள் மட்டுமே போன் பக்கம் கையைக் கொண்டு செல்ல முடியாமல் இருந்திருக்கின்றனர்.
ஆனால், உங்கள் எத்தனை நேரம் போனைத் தொடாமல் இருக்க முடியும் எனக் கேட்கப்பட்டதற்குப் பலரும் 2 முதல் 3 நிமிடங்கள் எனப் பதிலளித்துள்ளனர். புதிய செய்திகள் மற்றும் தகவல்களைத் தவறவிட்டு விடுவோம் என்ற பதற்றம் காரணமாக அடிக்கடி போனை எடுத்துப் பார்க்கும் வழக்கம் பலருக்கு இருப்பதாகக் கருதப்படுகிறது.
No comments:
Post a Comment